புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு மற்றுமொரு வாய்ப்பு: ஓசோ கொழும்பு ஹோட்டல் நிர்மாணம்

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு மற்றுமொரு வாய்ப்பு: ஓசோ கொழும்பு ஹோட்டல் நிர்மாணம்

சினோ லங்கா ஹோட்டல் நிறுவனத்தின் அங்கமான ஓசோ கொழும்பு ஹோட்டலின் நிர்மாணப் பணிகள் அடிக்கல் நாட்டும் வைபவத்துடன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் சினோ லங்கா ஹோட்டலின் பங்காளர்கள் மற்றும் தாய்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒனிக்ஸ் ஹொஸ்பிடாலிட்டி குழுமத்தின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். கொழும்பு -4, மெரின் டிரைவ் பகுதியில் சுமார் 150 அறைகளைக் கொண்டு அமையவுள்ள ஓசோ ஹோட்டல், உள்நாட்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கவுள்ளதுடன், தொழில் வாய்ப்புகளையும் நிர்மாணத்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்று நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டல் வர்த்தக நோக்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்கக் கூடிய வகையில் சகல வசதிகளையும் படைத்ததாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

பிரபல வர்த்தக பிரமுகரும் சினோ லங்கா ஹோட்டலின் தலைவருமான குண்டன்மல் மற்றும் கொன்ஃபிஃபி ஹோட்டல் குழுமத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளருமான ஸ்டெஃபான் ஃபுர்கான் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த ஹோட்டலின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.