புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 

நீடித்த நிரந்தர வளர்ச்சியைக் காட்டும் டெலிகொம்

நீடித்த நிரந்தர வளர்ச்சியைக் காட்டும் டெலிகொம்

இலங்கையின் முன்னணி தேசிய ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான ஸ்ரீலங்கா ரெலிகொம் PLC நிறுவனம், நீடித்த நிரந்தர வளர்ச்சியைக் காட்டியுள்ளது வரி அறவீட்டுக்கு முன்னரான இலாபம் (PBT) வரி அறிவீட்டுக்கு பின்னரான இலாபம் (PTA) வருமானம் மற்றும் ஏனைய பெறுமான குறிகாட்டிகள், இந்த வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றன. கடந்த வருடம் பல மைல் கற்களை எட்டிய இந்த நிறுவனம் , 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியியல் ஆண்டுக்கான பொருளாதார பெறுபேறுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்காலத்தின் நன்மை கருதி பெருமளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு முதலீடு செய்யப்பட்ட 18 பில்லியன் ரூபா நிதியானது வருடத்திற்கு வருடம் ஒப்பீட்டு ரீதியான 176 வீத அதிகரிப்பைக் காட்டுகிறது. வரி அறவீட்டுக்கு முன்னரான இலாபமாக ஈட்டப்பட்ட 6.53 பில்லியன் ரூபா வருடத்திற்கு வருடம் ஒப்பீட்டு ரீதியான பத்து வீத வளர்ச்சியைக் காட்டுகிறது. அதேவேளை வரி அறவீட்டுக்கு பின்னர் ஈட்டப்பட்ட நான்கு தசம் ஏழு எட்டு பில்லியன் ரூபாவானது வருடத்திற்கு வருடம் ஒப்பீட்டு ரீதியான 21 வீத அதிகரிப்பைக் காட்டுகின்றது.

இந்தக் காலப் பகுதியில் பெறப்பட்ட வருமானம் 50.95 பில்லியன் ரூபாவாகும். நாட்டின் தொலைத் தொடர்பாடல் தீர்வுகளை வழங்கும் பலமான ஒரு அமைப்பாக ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் செயல்முறை அமைப்பு மாற்ற திட்டத்துடன் பிணைந்துள்ள வியாபார உபாய நோக்கம் கொண்டதாக பரிணமித்துள்ளதென்பதையே, இந்தக் குறிகாட்டிகள் எடுத்துக் காட்டுகின்றன.

குழுமத்தின் நீடித்த நிரந்தர பெறுபேறுகள் மற்றும் ஸ்திரத்தன்மையை பயணத்தையே இந்த பெறுபேறுகள் விளக்கிக் கூறுகின்றன. சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் சற்று பின்னடைவு கண்ட ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் தற்சமயம் நிரந்தர இணைப்பு வருமானத்தில் ஸ்திரத்தன்மையையும் ஏனைய துறைகளில் பாரிய வளர்ச்சியையும் காட்டுகின்றது. மரபு வழியற்ற வருமானத்துறையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.