புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 

இலங்கையில் முதலாவது 'பச்சை பண்டகசாலை' குளோபல் பார்க் திறக்கிறது

இலங்கையில் முதலாவது 'பச்சை பண்டகசாலை' குளோபல் பார்க் திறக்கிறது

ஐக்கிய ராஜ்யத்தின் மிகப்பெரிய சில்லறை நவநாகரிக நிறுவனமான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸரினால் (M$S) தெரிவு செய்யப்பட்ட நடைமுறையிலான பிராந்திய மையமான குளோபல் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் லொஜிஸ்டிக்ஸின் தேவைகள், விநியோகங்கள் பற்றி ஒழுங்கமைப்பு நிலையான குளோபல் பார்க் அண்மையில் பச்சை பண்டகசாலையை ஆரம்பத்தது.

அண்ணளவாக GBP 10 பில்லியன் கொண்ட வருடாந்த மொத்த விற்பனையுடனான M$S ஐக்கிய ராஜ்யத்தில் 700 விற்பனை நிலையங்களையும், 40க்கு மேற்பட்ட நாடுகளில் முகவர் விற்பனை நிலையங்கள் உட்பட 300 சில்லறை விற்பனை நிலையங்களையும் கொண்டதாக சில்லறை செயற்பாடொன்றை மேற்கொள்கின்றது.

இலங்கையில் இந்த ஆரம்பத்திலான மையச் செயற்பாடு ஒரு புதுமையான கருத்துருவாகும். இது உள்நாட்டுத் தொழிற்றுறையில் அதன் வகையில் முதலாவதாக விளங்குகின்றது. பல்நாட்டு ஒன்றுதிரட்டலையும், பலதரப்பட்ட நாடுகளுக்கான பங்கீட்டினையும் கையாள்வதற்கு இலங்கையில் முதலாவது சர்வதேச தேவைகள், விநியோகள் ஒழுங்கமைப்பு மையமாக எமது நாட்டின் நிலையை உறுதிப்படுத்துவதற்கான இக் கருத்திட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கைச் சுங்கத் திணைக்களம் மற்றும் பலதரப்பட்ட வேறு வேறு அரசாங்க முகவராண்மைகள் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட பெறுமதிமிக்க உதவியின் காரணமாகவே இது சாத்தியப்பட்டது.

பச்சைத் தொழில் நுட்பங்களில் மிகப் பிந்திய புதுமாற்றங்களையும், வளர்ச்சியையும், கொண்டதாகவும், மிக உச்சமான சர்வதேச கொள்வனவாளர்கள் மத்தியில் வியாபாரத்தினதும், கொள்வனவுத் தீர்மானங்களினதும் முன்னணியில் நிலைத்திருக்கும் தன்மையுடனும் இலங்கையில் முதலாவது பச்சை பண்டகசாலைத் தொகுதி தொடக்கி வைக்கப்பட்டது.

அதன் தெரிவு செய்யப்பட்ட சந்தைகளில் போட்டிக்குரியதாக இலங்கை தொடர்ந்தும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அதன் உயர்வான முன்னுரிமைகளில் ஒன்றாக இக்கருத்திட்டத்தை குளோபல் பார்க்க அமைந்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.