புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 

நிர்மாணத்துறையை ஊக்குவிக்கும் டீயுளுநு மற்றும் குinஉழ

நிர்மாணத்துறையை ஊக்குவிக்கும் BASE மற்றும் Finco

உலகின் முன்னணி இராசாயனத் துறைக் கம்பனியான BASE மற்றும் உள்ளூர் நிர்மாணத் துறைக்கு விநியோகத்தை மேற்கொள்ளும் முதன்மைக் கம்பனிகள் Finco என்பன கட்டிட நிர்மாணத் துறையில் நிலைத்திருக்கும் பண்பை ஊக்குவிப்பதற்கான ஒத்துழைப்பில் கைகோர்ந்துள்ளன.

கட்டிடங்களில் சக்திப் பாவனை அதிகரித்த வருகின்ற நிலையில் BASE  கட்டங்களில் கூரைகளிலும் சுவர் பொருத்திகளிலும் மின்சாரப் பாவனையைக் குறைப்பதற்கான புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கி உதவும். கட்டிடமொன்றுக்குத் தேவையான நீர்ப்பாவனை, நீர்ச் சேமிப்பு, நீர் வடிந்தோடல் என்பன உட்பட எல்லா வகையான அம்சங்களிலும் ஓட்டுமொத்த எண்ணக்கருவை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் அமையும்.

இந்தப் புதிய கண்டுபிடிப்புகளையும் திட்டங்களையும் உள்ளூரில் நிர்மாணத் துறையில் அறிமுகம் செய்வதற்காக கட்டிடங்களை கட்டுவோர், வடிவமைப்பாளர்கள், அபிவிருத்தியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரோடு இணைந்து Finco செயற்படும்.

BASE இன் உற்பத்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீர் பொருத்திகளின் இணைப்பால் ஏற்படும் நன்மைகளை உள்ளடக்கியதே இந்த ஒட்டுமொத்த எண்ணக்கருவாகும். இதற்கென நவீன பொருத்திகள் சுவரிலும் கூரைகளிலும் பாவிக்கப்படுகின்றன. இவை சிறந்த சக்தி ஆற்றலை வழங்கக் கூடியவை. இவற்றின் மூலம் மொத்த சக்தி நுகர்வை 35 வீதத்தால் குறைக்க முடியும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.