ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39

புதிய அத்தியாயம் ஆரம்பம்

ஜனாதிபதி நாளை இந்தியா பயணம்

‘ஜனாதிபதியையும் தூதுக்குழுவையும் வரவேற்க இந்திய அரசும் மக்களும் பெரு மகிழ்ச்சியுடனேயே உள்ளனர்’

பிரதமர் மோடி தெரிவிப்பு லோரன்ஸ் செல்வநாயகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 15 ஆம் திகதி இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்று இவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் இலங்கை ஜனாதிபதியையும் தூதுக் குழுவினரையும் வரவேற்பதற்கு இந்திய அரசாங்கமும் மக்களும் பெரும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிப்ப தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் இலங்கை - இந்திய நல்லுறவில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

விவரம்

இரகசியப் பொலிஸார் கோட்டாவிடம் விசாரணை

சில கேள்விகளுக்கு கால அவகாசம் கோரியதாக தகவல்

எவன்காட் ஆயுதக் கப்பல் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாடு மண்டபத்தில் இரகசியமாக இயங்கி வந்த ஆயுதக் களஞ்சியம் ஆகியவை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார்.

விவரம்


வடமாகாண சபை தீர்மானம் நல்லிணக்கத்தை பாதிக்கும்

TNA - அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும்

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்த தீர்மானம் நல்லிணக்க செயற் பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட அவர் நாட்டின் இறைமைக்கு குந்தகமான விடயங்களை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், மாகாண சபைக்குள்ள விடய பரப்பிற்கு தொடர்பற்ற தீர்மானமே வடமாகாணத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது.

விவரம்

 

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு நேற்று விஜயம் செய்த கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க துறைமுகத்தை பார்வையிடுகிறார். துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் உரையாடுவதைக் காணலாம். (படம்: மல்லாகம் குறூப் நிருபர் நவரட்னராஜா)

 

பலாலியில் விடுவிக்கப்படும் காணிகளில் மாதிரிக் கிராமம் அமைப்பது உகந்ததல்ல

பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படுவதாயின் உரிய காணி உரிமையாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இதனை விடுத்து காணிகளைப் பிரித்து மாதிரிக் கிராமம் அமைப்பதோ அல்லது மக்களுக்குப் பகிர்ந்த ளிப்பதோ பிழையான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி தெரிவித்தார். முதற்கட்டமாக 220 ஏக்கர் காணிகளை 20 பேர்ச் காணித் துண்டுகளாகப் பிரித்து மக்களுக்கு வழங்கப்படவிருப்பதாக புதிய அரசாங்கம் கூறியுள்ளது.

விவரம்


  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு விஜயம் செய்த தகவல், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தமிழ் சிங்கள கலைஞர்கள், பாடகர்களுக்கு புலமை சொத்துரிமை வரியை வழங்கினார். இலங்கையின் சிரேஷ்ட பாடகர் சூரியகுமார் முத்தழகுக்கு அமைச்சர் அதனை கையளிக்கும் போது எடுத்த படம். அருகில் அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதாரன உட்பட முக்கியஸ்தர்களும் காணப்படுகின்றனர். (படம் : சுதத் நிஷாந்த)