ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
கச்சதீவு திருவிழா: தமிழகத்திலிருந்து 100 படகுகளில் 5300 பேர் வருவர்

கச்சதீவு திருவிழா: தமிழகத்திலிருந்து 100 படகுகளில் 5300 பேர் வருவர்

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு தமிழ்நாட்டிலிருந்து 100 படகுகளில் சுமார் 5,300 பேர் வருவதற்கான ஆயத்தங்களை செய்துவருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்முறை இளைஞர்கள் சுமார் 6000 பேரளவில் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து கச்சதீவு திருவிழாவிற்கு வருவதற்கு இதுவரை 5,300 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் திருவிழாவிற்கு சென்று வர தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசே செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய, இலங்கை மக்கள் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான திருவிழா எதிர்வரும் 28ம் திகதி மற்றும் மார்ச் மாதம் 1ம் திகதியும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதற்கென தமிழகத்தில் இருந்து செல்ல இதுவரை 100 படகுகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 5,300 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வாறு பயணிக்கவுள்ள ஒவ்வொரு பக்தரிடமும் படகிற்கு ஒரு நபருக்கு ரூ. 1000ம் என்றும் தனியாக ரூ.300 (இந்திய ரூபாய்) விழா குழுவிற்கு கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கச்சதீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களிடம் தலா ஒரு நபருக்கு ரூ. 1300 தமிழகத்தில் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பலர் கண்டனம் தெரிவித்து விழா குழு பக்தர்களிடம் வசூல் செய்யக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி