ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
மீரியபெத்த வீடமைப்பு: 27ல் அடிக்கல் நடும் வைபவம்

மீரியபெத்த வீடமைப்பு: 27ல் அடிக்கல் நடும் வைபவம்

மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை மக்கள் தெனிய பகுதியில் நிர்மாணிக்க தீர்மானம். பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் தெரிவிப்பு.

கொஸ்லந்த மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் ஆகியோர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு புதிய வீடுகளை அமைப் பதற்கான நிலத்தினை தெரிவு செய்யும் பணியில் நேற்று 13.02.2015 ஈடுபட்டனர். இதற்கமைய பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மக்கள் தெனிய பகுதி யில் குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற் கான புதிய நிலம் தெரிவு செய்யப் பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத் தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த நிலத்தின் மண் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் அனைத்துவிதமான பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப் பட்டதன் பின்னர் இந்நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய குறித்த நிலப்பரப்பில் ஒரு குடும்பத்திற்கு 7 பேர்ச்சஸ் அளவிலான நிலம் ஒதுக்கப்பட்டு தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

மக்கள்தெனிய எனும் பகுதி தமிழ் குடியிருப்பு தொகுதியாக அடை யாளப்படுத்தப்பட்டு அனைத்து வசதிகளுடனும் பாதிக்கப்பட்ட மக் களுக்கு கையளிக்கப்படும். புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான காணி உரிம பத்திரம் உத்தியோகபூர்வ பதிவுகளுடனும் பதிவு செய்யப்பட்டு கணவன் மற்றும் மனைவியின் பெயரில் வழங்கப்படும்.

இந்த வீட்டு திட்டத்திற்கான அடிக் கல் நாட்டும் விழா எதிர்வரும் 27ம் திகதி பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோரினால் அடிக்கல் நாட்டப்படவுள்ளதுடன் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகளை எதிர்வரும் ஐந்து மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பெருந் தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் குறிப் பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி