ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை காரணம் காட்டி சிலர் குழப்ப முயற்சி

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை காரணம் காட்டி சிலர் குழப்ப முயற்சி

கல்வி அமைச்சின் அனுமதியு டனேயே பெற்றோரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் என்ற கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை காரணம் காட்டி அரசாங்கம் கல்விக்காக பணம் அறவிடுவதாகச் சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வியை சந்தித்து அடிப்படைவாத அரசியல் குழுக்களே இவ்வாறு வதந்திகளை பரப்பி வருகின்றன. இது குறித்து பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

மிக நீண்ட காலமாக பாடசாலைகளின் வேறு தேவைகளுக்கு எனக்கூறி பெற்றோரிடமிருந்து பணம் அறவிடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்துள்ளது என முறைப்பாடுகள் வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் தொடர்பாக உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு உடனடியாக பணம் அறவிடுவதை நிறுத்துமாறும் ஏதாவது அவசர தேவை இருப்பின் கல்வி அசைம்சின் அனுமதியுடன் குறிப்பிட்டளவு பணம் அறவிடலாம் என கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றை அனுப்பியது.

இதனை சாதகமாக்கிக் கொண்டு அரசின் 100 நாள் திட்டத்தை குழப்பும் வகையில் இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து பெற்றோர் விளிப்புடன் இருக்க வேண்டும். அத் துடன் வரவு - செலவு திட்டத்தில் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்படும் வரையே இந்த பணம் அறவிட முடியும் என்பது செல்லுபடியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி