ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
வடமாகாண சபை தீர்மானம் நல்லிணக்கத்தை பாதிக்கும்

வடமாகாண சபை தீர்மானம் நல்லிணக்கத்தை பாதிக்கும்

TNA - அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும்

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்த தீர்மானம் நல்லிணக்க செயற் பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட அவர் நாட்டின் இறைமைக்கு குந்தகமான விடயங்களை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், மாகாண சபைக்குள்ள விடய பரப்பிற்கு தொடர்பற்ற தீர்மானமே வடமாகாணத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட படையி னருக்கு எதிரான கருத்தையே வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாட்டை குழப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே கருதுகிறோம். சர்வதேச விசாரணை நடத்தி படையினரை யுத்த நீதிமன்றத்தின் முன் நிறுத்த தயாராகின்றனர்.

அதிகார பகிர்விற்கு நாம் எதிர்ப்பு கிடையாது. ஆனால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகார பகிர்வு இடம்பெற வேண்டும் என்றார்.

ஹெல உறுமய கண்டிப்பு

வடமாகாண சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை தமது கட்சி கண்டிப்பதாக ஹெல உறுமய தெரிவித்தது. நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த வர்ணசிங்க இந்தத் தீர்மானம் தேசிய நல்லிணக்கத் திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

த.தே.கூ. அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று இணைந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி