ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 
இரகசியப் பொலிஸார் கோட்டாவிடம் விசாரணை

இரகசியப் பொலிஸார் கோட்டாவிடம் விசாரணை

சில கேள்விகளுக்கு கால அவகாசம் கோரியதாக தகவல்

எவன்காட் ஆயுதக் கப்பல் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாடு மண்டபத்தில் இரகசியமாக இயங்கி வந்த ஆயுதக் களஞ்சியம் ஆகியவை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார்.

பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோனால் நியமிக்கப்பட்ட இரகசியப் பொலிஸ் அதிகாரிகள் மூவர் கோத்தாபய ராஜபக்ஷவின் வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் இந்த விசாரணை இடம்பெற்றது. விசாரணையின் போது சில தகவல்கள் சம்பந்தப்பட்ட கோவைகளை ஆய்வுக்குட்படுத்திய பின்பே பதில் கூற முடியுமென கோத்தாபய ராஜபக்ஷ இரகசியப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவன்காட் பாதுகாப்பு சேவை மற்றும் ஆயுதங்கள் ஆகியவை பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்தமை, யுத்தத்திற்கு மட்டும் பாவிக்கவேண்டிய ஆயுதங்கள் பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைத்திருந்தமை, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப ஆயுத களஞ்சியம் போன்ற இடங்களை இயக்கியமை, பாதுகாப்புப் பிரிவினருக்கு அதற்கான அனுமதியை வழங்கியமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார்.

விசாரணைகளை மேற்கொள்வதற்கான காலஅவகாசமொன்றை கோத்தாபய ராஜபக்ஷ இரகசியப் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வேறொரு தினம் அதற்காக வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹம்பாந்தோட்டை கடல் பிரதேசத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் மேற்படி ஆயுதக் கப்பல் அடையாளம் காணப்பட்டது. அந்தக் கப்பலில் ஆயு தங்கள் நிறைந்து காணப்பட்டது. இது தொடர்பாக அதன் ஊழியர்கள் தெரிவிக் கின்ற போது, கடல்மார்க்கமாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கு வதற்காகவே இந்த ஆயுதங்கள் உப யோகிக்கப்பட்டன எனத் தெரிவித்தனர்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரகசியமாக இயங்கிய ஆயுதக் களஞ்சியம் இதன் பின்னர் சில தினங்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த களஞ் சியமானது தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனமொன்றுக்கு உரித்துடையதென தெரிவிக்கப்பட்டது. இவை தொடர்பிலும் சோதனை மேற்கொண்ட இரகசியப் பொலிஸார், களஞ்சியசாலைக்கும் ஆயுதங்களுக்கும் பொறுப்பாக இருந் தவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உட்பட 50 பேரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண் டுள்ளனர்.

களஞ்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் விசேட நிபுணர்களின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக நட வடிக்கைகளில் மூன்று இரகசிய பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி