ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 
நாளைய உலகை வெல்வதற்கு இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்

இன்று சர்வதேச இளைஞர் தினம்

நாளைய உலகை வெல்வதற்கு இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்

நாட்டிலுள்ள இளைஞர் சமூகம் செல்லும் பாதைக்கு ஏற்பவே அவர்களின் எதிர்காலம் சுபீட்சமானதா இல்லையா என்பது முடிவாகிறது.

இளைஞர்களுக்கு சுதந்திரத்தையும் அதனூடாக சிறந்த சூழலையும் கட்டியெழுப் புவது முழு சமூகத்தினதும் பொறுப்பாக மாறியுள்ளதாக இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ள தாவது: உலகில் அதிக கேள்வி இருப்பதும் அதிக ஈர்ப்பு இருப்பதும் இளைஞர் சமூகத்திற்காகும். நாட்டில் இளைஞர்கள் பயணிக்கும் மார்க்கத்திற்கு ஏற்ப அதன் எதிர்காலம் சுபீட்சமானதா இல்லையா என்பது முடிவாகும்.

இந்தப் பலம் வாய்ந்த இளமையை பயன்மிக்கதாக பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு சுதந்திரமும் அதனூடாக சிறந்த சூழலையும் ஏற்படுத்துவதும் முழு சமூகத்தினதும் பொறுப்பாக மாறியுள்ளது.

வருடாந்தம் கொண்டாடப்படும் சர்வதேச இளைஞர் தினத்தினூடாக இளைஞர்களின் நாளைய தினத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் நோக்கத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாளுக்கு நாள் இளைஞர்களை இலக்கு வைத்து நவீன தொழில்நுட்பமும் வர்த்தக உலகமும் செயற்பட்டு வரும் இந்த கால கட்டத்தில் இளைஞர்கள் அவற்றில் காணாமல் போகாமல் சிறந்த மனிதராக உருவாகும் மன நிலையை உருவாக்க வேண்டும். அவர்கள் நல்லது கெட்டதை பிரித்தறியும் சிறந்த மனநிலையை வழங்க வேண்டும்.

இளைஞர்கள் நினைத்தபடி முடிவெடுக்கும் நபராக மூத்த சமூகம் பழைய மனப்பாங்குடன் பாராது இளைஞர்களின் விருப்பு வெறுப்புகளை பாதுகாத்து நாளைய உலகை வெல்வதற்கு வழியமைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இதனால் இளைஞர்களன்றி நாட்டின் எதிர்காலமே பாதிப்படையும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி