ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

அரச கேபிள் தொலைகாட்சி மூலமாக வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் புரோட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை

அரச கேபிள் தொலைகாட்சி மூலமாக வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் புரோட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை

அரச கேபிள் தொலைகாட்சி மூலமாக வீடுகளு க்கு குறைந்த கட்டணத்தில் புரோட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் nஜயலலிதா அறிவித்தார்.

சட்டப்பேரவையில்; அவர் நேற்று வெளியிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளின் விவரம்:

யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற புறநா னூற்று வரிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அறிவியல் யுகத்தில் அளப்பரிய வளர் ச்சியினை பெற்று இருக்கின்ற தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கான சேவை களை விரைந்து வழங்கி வருகின்ற எனது தலை மையிலான அரசு அதனை மேலும் மேம்படுத்துவ தற்கான நடவடிக்கைகளையும் முனைப்புடன் எடுத்து வருகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டில் கீழ்க்காணும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சிஅடைகிறேன்.

பல அரச துறைகள் தங்களது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை அதிக அளவில் பொதுமக்களுக்கு அளித் திட முயன்று வரும் இத்தருணத்தில், தமிழ் நாடு மாநில தரவு மையத்தில் தற்போது ள்ள உட்கட்டமைப்புவசதிகள் இத்தேவை களைப் பு+ர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. அரசுத் துறைகளின் அதிகரித்து வரும் தகவல் உட்கட்டமைப்பு தேவை களை கருத்தில் கொண்டு, 5,000 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டடம் ஒன்று கட்டி அதில் 40 அடுக்குகளை அமைத்து 40 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் நிலை உயர்த்தப்படும்.

மின்ஆளுமைக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகளை தடையில்லாமல் வழங்குதல் அவசியமான ஒன்றாகும். ஆனால், இயற்கை சீற்றங் களான பு+கம்பம், வெள்ளம் போன்றவை தரவு மைய பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளன. எனவே இச்சேவைகளுக்கான தரவுகளை பேரிடர் மீட்பு மையம் தவிர மாநகரில் உள்ள வேறு ஒரு இடத்திலும் நகல் ஏற்றுவது அவசியமாகும்.

அரசின் மின்னாளுமை சேவைகளுக்கான தரவுகளை, மாநில தரவு மையத்திலிருந்து உடனுக்குடன் மற்றொரு இடத்தில் நகல் ஏற்றம் செய்யும் பொருட்டு, 1,250 சதுர அடி பரப்பளவில் ஒரு பேரிடர் தரவு மீட்பு மையம் 5 கோடி ரூபாய் செலவில் அமை க்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் மாணவ மாணவியருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இம்மடிக்கணினிகளை சிறந்த முறையில் உபயோகப்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப வளங்களை குறைந்த கட்டணத்தில் வழங்குவது அவசியமாகிறது.

இளைஞர்களின் தொழில் முனையும் திறனை மேம்படுத்தும் வகையிலும் அவர்களின் படைப் பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் மாணவர் கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக் ;கான மேகக் கணினி சார்ந்த சேவைகள் வழங்கும் திட்டம் 50 இலட்சம் ரூபாய் செலவில் செயல் படுத்தப்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி