ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

‘புரநெகும’ வேலைத்திட்டத்தின் கீழ் 16 சிறிய நகரங்கள் அபிவிருத்தி

‘புரநெகும’ வேலைத்திட்டத்தின் கீழ் 16 சிறிய நகரங்கள் அபிவிருத்தி

நாட்டிலுள்ள சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் ‘புரநெகும’ வேலைத் திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் 16 சிறிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நகரங்களில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள உள்ளூராட்சி மன்றதிற்கு 500 இலட்சம் ரூபா வீதம் 8000 இலட்சம் ரூபா நிதியினை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் சப்ரகமுவ மாகாண சபைக்கு வழங்கியுள்ளது.

இந்த வேலைத் திட்டத்துக்கமைய அண்மையில் கஹவத்தை நகர சந்தைத் தொகுதியின் அபிவிருத்திப் பணிகள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதேசமயம் ‘புரநெகும’ வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் பெல்மதுளை பொது சந்தைத் தொகுதிக்காக 454 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி