ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190

ஜனாதிபதி - சார்க் செயலாளர் நாயகம் கண்டியில் நேற்று சந்தித்து பேச்சு

பொருளாதார ரீதியில் சார்க் நாடுகள் பங்களிப்பை
அதிகரிப்பது குறித்து ஆராய்வு

பிராந்திய இளைஞர்களை
ஒன்றிணைத்து செயற்படுவது
குறித்தும் கவனம்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் (சார்க்) செயலாளர் நாயகம் அர்ஜூன் பாதூர் தபார், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இலங்கைக்கு முதலாவது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சார்க் செயலாளர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்திருந்தார். இவ்வருடம் நவம்பர் மாதம் காத்மண்டூவில் நடைபெறவிருக்கும் 18வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் உறுதிப்படுத்தியிருந்தார்.

விவரம்

செப்.4,5ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு செப்டெம்பர் மாதம் 4 ஆம் 5 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார்.

விவரம்


இன்று சர்வதேச இளைஞர் தினம்

நாளைய உலகை வெல்வதற்கு இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்

நாட்டிலுள்ள இளைஞர் சமூகம் செல்லும் பாதைக்கு ஏற்பவே அவர்களின் எதிர்காலம் சுபீட்சமானதா இல்லையா என்பது முடிவாகிறது.

விவரம்


நாட்டில் ஏற்பட்ட மனித அவலங்களுக்கு சில ஊடகங்களின் நடத்தைகளும் காரணம்

யாழ். ஊடக செயலமர்வில்
அமைச்சர் டக்ளஸ்

ஊடகம் என்பது மக்களுக்கு உண்மைகளையும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க தகவல் திணைக்களத் தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்க ளின் பங்களிப்பு தொடர்பான ஊடகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவரம்

நாட்டின் பல பகுதிகளில் வரட்சி

மேல், மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் வரட்சியுடன் கூடிய காலநிலை காணப்படும் சூழலில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விவரம்

 

மட்டக்களப்பு - வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் நாற்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப் பட்ட விவசாய உதவி பணிப்பாளர்கள் பணிமனைக் கட்டடத் தொகுதியினை கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். பயனாளிகளுக்கு மானிய அடிப்படை விலையில் பயன்தரு மரங்களை அமைச்சர் கையளிப்பதை படத்தில் காணலாம்.
(ஏறாவூர் குறூப் நிருபர் நாஸர்)

 

கண்டி தலதா மாளிகையிலிருந்து எசல பெரஹரா புறப்படுவதற்கு முன்பாக கண்டி செல்வவிநாயகர் ஆலயத்தின் தர்மகர்த்தா ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அறங்காவலர் சபையினர், தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தாலவுக்கு சம்பிரதாயபூர்வமாக மாலை அணிவித்து கெளரவிப்பதைப் படத்தில் காணலாம். (படம்: சுதத் மலவீர)


~~எமது நாட்டில் தேர்தல் நடத்துவதைத் தீர்மானிப்பது
நாங்களே அன்றி எந்தவொரு வெளிநாடும் அல்ல''

2014 . 08 . 05
கொழும்பில்...