ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

இஸ்ரேல்-காசாவுக்கு இடையில் மீண்டும் 72 மணிநேர யுத்த நிறுத்தம் அமுல்

இஸ்ரேல்-காசாவுக்கு இடையில் மீண்டும் 72 மணிநேர யுத்த நிறுத்தம் அமுல்

தீர்வொன்றை எட்டுவதற்கு பலஸ்தீன பிரதிநிதிகள் மூன்று நாள் காலக்கெடு

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனின் காசாவுக்கு இடையில் மீண்டும் 72 மணிநேர மனிதாபிமான யுத்த நிறுத்தம் நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமானது. எகிப்தின் தீவிர மத்தியஸ்த முயற்சியால் கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்த யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.

யுத்த நிறுத்தம் ஆரம்பமானதை அடுத்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெறும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்க இஸ் ரேல் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை மீண்டும் எகிப்தை சென்றடைந்தனர்.

முன்னதாக இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட 72 மணிநேர யுத்த நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முடி வடைந்ததை அடுத்து ஹமாஸ் ஆளுகையில் இருக்கும் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித் ததோடு பதிலுக்கு பலஸ்தீன போராளிகளும் இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை தொடர்ந்தனர்.

மோதல் ஆரம்பமானதை அடுத்து சமரச பேச்சுவார்த் தைகளில் பங்கேற்றிருந்த இஸ்ரேல் பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை கெய்ரோவில் இருந்து நாடு திரும்பினர்.

புதிய யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கும் வரையான காலத் தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் கடந்த ஞாயிற் றுக்கிழமை யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்க ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர் காசாவெங்கும் நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மோட் டர் சைக்கிளொன்றை இலக்குவைத்து கான் யு+னிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

முன்னர் வட மேற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு வான் தாக்குதலில் 45 வயது சாகிர் ரிஹான் என்பவர் கொல்லப்பட்டதோடு மேலும் நால்வர் காய மடைந்தனர்.

இதன்போது யுத்த விமானங்கள் காசா நகர மேயர் நிஸார் ஹிஜhஸியின்; வீடு உட்பட மேலும் பல குடியி ருப்பு வீடுகள் மீது குண்டு போட்டு தாக்கி அழித்தன. எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவெங்கும் இடி பாடுகளில் இருந்த மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் அன்றைய தினத்தில் மாத்திரம் 18 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த நான்கு வாரங்களாக நீடிக்கும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,939 ஆக உயர்ந்துள்ளது.

தவிர 10,000க்கும் அதிகமானவர் கள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 73 வீதமானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்று ஐ.நா. கணித்துள்ளது. இந்த மோதல்கள் காரணமாக மொத்தம் 64 இஸ்ரேல் இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இஸ்ரேல் தரப்பில் மேலும் மூன்று சிவிலியன்கள் பலி யாகினர்.

இந்த நிலையில் நேற்று யுத்த நிறுத்தம் ஆரம்பிக் கப்பட்டதை அடுத்து காசா மக்கள் மீண்டும் சுதந்திரமாக வீதிகளில் நடமாட ஆரம்பித்தனர். முற்றுகையில் இருக் கும் காசாவில் உள்ள வங்கிகள் திறக்கப்பட்டிருந்தன.

இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்திய காசாவின் எல் லைப்பகுதிகளான '{iஜயா, பைத் லஹியா மற்றும் ரபாஹ் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகள் தொடர்ந்து இருக்கிறதா என்பது குறித்து கண்டறிய மீண்டும் அந்த பகுதிகளுக்கு பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

மீட்பாளர்களும் மருத்துவ பிரிவினரும் யுத்த நிறுத் தத்தை பயன்படுத்தி இஸ்ரேல் வான் தாக்குதலால் தரை மட்டமாக்கப்பட்ட கட்டிடங்களில் சிக்கியிருக்கும் உடல் களை தொடர்ந்து தேடி வருகின்றனர். யுத்த நிறுத்த காலத்திலும் அதிக அவதானத்துடன் இருக்கும்படி காசா உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.

காசாவில் சுமார் 250,000 பலஸ்தீனர்கள் திரும்பிச் செல்ல வீடு இல்லாமல் இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த ஜ{லை 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேல் தாக்குதல்களால் சுமார் 80 குடும்பங்க ளின் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் யுத்த நிறுத்தம் ஆரம்பித்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் இராணுவம் மேற்குக் கரையின் நப்லூஸ் பகுதியை சுற்றிவ ளைத்து தேடுதல் மேற்கொண்டபோது 24 வயது பலஸ்தீன இளைஞன் ஒருவரை கொன்றுள்ளது.

இதில் கபலான் என்ற கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு கட்டிடம் ஒன்றை முற்றுகையிட்டி ருக்கும் இஸ்ரேல் இராணுவம் கையெறி குண்டு கள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியபோதே இந்த இளைஞன் கொல்லப்பட் டுள்ளான். இந்த தாக்குதலின்போது குடியிருப்பு பகுதியில் இருந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஐவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தாவு+த் அல் அக்ரா என்ற குறித்த இளைஞன் கொல்லப்பட்ட பின்னர் இஸ்ரேல் இராணுவம் தாக் குதலுக்கு இலக்கான கட்டிடத்தின் ஒரு பகுதியை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் கொல்லப்பட்டிருக்கும் அல் அக்ரா என்ற இளை ஞன் மேற்குக் கரையை ஆளும் பத்தாஹ் அமைப்பின் உறுப்பினர் என நம்பப்படுகிறது. இவர் அண்மையில் இஸ்ரேல் இராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி காயமேற்படுத்திய சந்தேக நபர் என்று இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.

யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் இந்த மூன்று தினங்களும் இஸ்ரேலுடன் ஒரு விரிவான சமரச ஒப்பந் தத்தை செய்துகொள்ள கடைசி சந்தர்ப்பம் என்று கெய்ரோவில் இருக்கும் பலஸ்தீன பிரதிநிதிகள் எகிப்து மத்தியஸ்தர்களை எச்சரித்துள்ளனர். சமரச பேச்சுவார்த் தையில் ஈடுபட்டிருக்கும் பலஸ்தீன பிரதிநிதிகள் குழு வைச் சேர்ந்த கைஸ் அபு+ லைலா குறிப்பிடும்போது, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற் சிகளுக்கும் இஸ்ரேல் பாதகமாகவே பதிலளித்தன. யுத் தத்திற்கு முந்தைய நிலையை ஏற்படுத்தவே இஸ்ரேல் தரப்பு முயற்சிக்கிறது என்றார்.

"கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட சந்திப்பில் இஸ்ரேல் புதிதாக எதனை யும் கொண்டுவரவில்லை. அவர்கள் காசா வுக்கு அனுமதிக்க வேண்டிய பொருட் களின் அளவு மற்றும் வகைகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் உட்பட சிறிய விவகாரங்கள் பற்றி மாத்திரமே பேசி னர். எமது கோரிக்கைகளுக்கு அவர் கள் முற்று முழுதாக பாதகமான பதி லையே வழங்கினர். எனவே நாம் அவைகளை நிராகரித்தோம்" என்றும் அபு+ லைலா குறிப்பிட்டார்.

கடந்த எட்டு ஆண்டுகள் நீடிக்கும் இஸ்ரேலின் காசா மீதான முற்றுகையை அகற்ற வேண்டும் என்பதே பலஸ்தீன பிரதிநிதிகளின் பிரதான கோரிக்கை யாகும். தவிர இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீனர்களை விடுவிக்க வும் காசாவில் விமான நிலையம் மற் றும் துறை முகத்தை அமைக்கவும் மீன் பிடிப்பதற்கான கட்டுப்பாட்டு வளையத்தை அகற்றவும் பலஸ்தீன தரப்பு கோருகிறது.

"விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்ற கேள்விக்கே இடமில்லை என்று இஸ்ரேல் பிரதிநிதிகள் எகிப்து மத்தியஸ்தர்களிடம் குறிப்பிட்டுள்ளனர். பலஸ் தீனர்களின் அடுத்த கோரிக்கைகளுக்கும் இஸ்ரேல் புதிதாக எதனையும் கூறவில்லை" என்று பலஸ்தீன பிரதிநிதி அபு+ லைலா விபரித்துள்ளார்.

இதில் காசா எல்லைக்கடவையின் கட்டுப்பாடு பலஸ் தீன நிர்வாக பாதுகாப்பு பிரிவின் கீழ் வரவேண்டும் என்று இஸ்ரேல் தரப்பு கோரியுள்ளது. ஆனால் அது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என அபு+ லைலா விளக்கினார். ஆனால் காசாவில் பலஸ்தீன நிர்வாக பாதுகாப்பு பிரிவினர் இருப்பதற்கு ஹமாஸ் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மறுபுறத்தில் காசாவுக்கான மற்றொரு நுழைவாயிலான எகிப்தின் ரபாஹ் கடவை குறித்து எகிப்து தரப்பு உறுதி யான பரிந்துரையை செய்யவில்லை என்று பலஸ்தீன பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் குறித்த எல் லைக் கடவையின் பாதுகாப்பு குறித்து முன்னுரிமை வழங்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் ரபாஹ் நுழைவாயிலில் பலஸ்தீன நிர்வாகத் தின் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் அதிகாரிகளை நிலைநிறுத்த பரிந்துரைக்கப்பட் டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் மூலோபாயங்கள் தொடர் பான அமைச்சர் யுவல் ஸ்டைனிட்ஸ் நேற்று திங்கட் கிழமை வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "காசா ஆயுததாரிகளை நிராயுதபாணியாக்குவதே நீண்ட கால நிரந்த யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு தீர்க்கமான காரணியாக இருக்கும். இதனை இராணுவத்தை கொண் டல்லாமல் இராஜதந்திர ரீதியில் செய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இராஜதந்திர தீர்வொன்று குறித்து நான் உறுதியாக நம்புகிறேன். இராஜதந்திர தீர்வொன்று இல்லாவிட்டால் விரைவில் அல்லது தாமதித்து இராணுவ தீர்வொன்றின் மூலம் நாம் காசாவை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் ஆயுதமற்ற பகுதியாக மாற்று வோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி