ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

‘உயிரைக் காப்பாற்றவே மிளகு தூள் ‘ஸ்ப்ரே’ செய்தேன்’

‘உயிரைக் காப்பாற்றவே மிளகு தூள் ‘ஸ்ப்ரே’ செய்தேன்’

இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்

‘எனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே மிளகு தூள் ‘ஸ்ப்ரே’யை பயன்படுத்தி னேன்’ என்று மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விஜயவாடா தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் லகடபதி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியபோது,

‘தெலுங்கானா சட்டத்துக்கு எதிராக ஆரம்பம் முதல் சீமாந்திரா பகுதி உறுப்பினர்கள் கட்சி வித்தியாசமின்றி குரல் கொடுத்து வருகின்றனர். நான் நீண்ட காலமாகவே எனது தற்காப்புக்காக மிளகு தூள் ஸ்ப்ரேயை உடன் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன்.

தெலுங்கானாவுக்கு எதிராக போராடி வருவதால் என்னை தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கக்கூடும் என்ற அச்சத்தால் ‘ஸ்ப்ரே’யை வைத்தள்ளேன். இந்நிலையில் மக்களவையில் வியாழக்கிழமை நண்பகலில் தெலுங்கானாவை எதிர்த்து உறுப்பினர்கள் குரல் பாடுத்த போது திடீரென தெலுங்கானா பகுதியைச்சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டமாக வந்து சீமாந்திரா உறுப்பினர்களை சூழ்ந்து கொண்டனர்.

அவர்கள் சீமாந்திரா உறுப்பினர்களைத் தாக்கத் தயாரானபோது தற்காப்புக்காக மிளகுத் தூள் ‘ஸ்ப்ரே’யை எடுத்துத் தெளித்தேன். யாரையும் காயப்படுத்தவோ தாக்கவோ இல்லை. மிளகுத் தூள் ‘ஸ்ப்ரே’ உயிரைப் பறிக்கும் ஆயுதமோ கருவியோ இல்லை. எங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஸ்ப்ரேயை பயன்படுத்தினேன். ஆனால் எங்கள் தரப்பு நியாயத்தைப் பரிசீலிக்காமல் தன்னிச்சையாக மக்களவைத் தலைவர் எடுத்துள்ள நடவடிக்கை துரதிருஷ்ட வசமானது’ என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி