ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

257 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தென்னாபிரிக்கா திணறல்

அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா இடையேயான முதலாவது டெஸ்ட்:

257 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தென்னாபிரிக்கா திணறல்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவில் உள்ள செஞ்சு+ரியன் நகரில் நடைபெற்று வரும் போட்டியில் நாணயச் சுழற் சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலாவது இன்னிங்சில் அந்த அணியின் N'hன் மார்ஷ் (148ஓட்டம்), ஸ்மித்(100 ஓட்டம்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 397 ஓட்டங்கள் குவித்தது அவுஸ்திரேலியா. தென்னாபிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஸ்டெய்ன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெக்லாரன் மற்றும் பீட்டர்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தலைவர்; ஸ்மித் 10 ஓட்டங்களிலும், பீட்டர்சன் 2 ஓட்டங்களுடனும்;, ^பிளசிஸ் 3 ஓட்டங்களுடனும்;, அபாயகரமான ஆட்டக்காரரான அம்லா 17 ஓட்டங்களுடனும்; ஆட்டமிழந்தனர். 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 100 ஓட்டங்களை கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் அடுத்து களமிறங்கிய டிவில்லியர்சும் டுமினியும் அணியை சரிவிலிருந்து மீட்டு 100 ஓட்டங்களை கடக்க வைத்தனர். லயனின் பந்துவீச்சில் ஜோன்சனின் சு+ப்பர் பிடியால்; டுமினி ஆட்ட மிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மெக்லரன் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் டிவில்லியர்ஸ் அரைச் சதத்தை கடந்தார்.

ஆட்டநேர முடிவில் தென்னாபி ரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டிவில்லியர்ஸ் 52 ஓட்டங்களுடனும் பீட்டர்சன் 13 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். 4 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 257 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியா தரப்பில் ஜோன்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி