ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40

உலக வரைபடத்தில் இலங்கை எங்கு இருக்கிறது என்பது தெரியாதவர்களே அமெரிக்க காங்கிரஸில்

ஊடகங்களின் தலைமை அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் செயலாளர்

உலக வரைபடத்தில் இலங்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ளாத, பொது அறிவு இல்லாத அமெரிக்க காங்கிரஸின் ஓர் உறுப்பினர் இலங்கைக்கு எதிராக கண்டனப் பிரேரணையை முன்மொழிவதற்கு தலைமை தாங்கியிருக்கிறார் என ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை நடைமுறைப்படுத்தும் தேசிய நடவடிக்கை திட்டத்திற்கு தலைமை தாங்கும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஊடகங்களின் தலைமை அதிகாரிகளை கொழும்பில் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்திரு க்கிறார்.

விவரம்

சகல இன மக்களும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவது அவசியம்

எந்தவொரு அரசாங்கத் தலைவரும் அவர் அதிகாரத்தில் இருக்கும் போது செய்த உதவிகளை பொதுவாக பொதுமக்கள் அவர் வாழ்ந்து கொண்டி ருக்கும் போது அந்தளவுக்கு பொருட் படுத்துவதில்லை.

விவரம்


தேர்தல் திணைக்களத்துக்கு உதவ இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தயார்

உருளைக் கிழங்கு, பெரிய தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் பக்கசார்பின்றி செயற்படுவது குறித்து கண்காணிக்கவும் அது தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு உதவுவதற்கும் . . .

விவரம்

 

 கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 13ந் திகதி ஆரம்பமான போது ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி கோவிலிலிருந்து கம்பன் திருவுருவப் படம் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி ஊர்வலமாக வருவதையும், ஊர்வலத்தில் கலாநிதி கு. சோமசுந்தரம், சங்கீத பூஷணம் சு. கணபதிப்பிள்ளை, இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர், அ. ஆரூரன், சுவாமி ராஜேஸ்வரானந்த மகராஜ், கம்பன் கழக தலைவர் தெ. ஈஸ்வரன், திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபை தலைவர் வி. கயிலாசபிள்ளை ஆகியோரை படத்தில் காணலாம்.
(படம்: கே. பொன்னுத்துரை, கொழும்பு
கிழக்கு தினகரன் நிருபர்)

ஓய்வு பெற்ற ரயில் சாரதிகளை கடமைக்கு வருமாறு அழைப்பு

வேலைநிறுத்தத்தால் அதிகமான சேவைகள் இடைநிறுத்தம்

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்த த்தினால் நேற்றும் அநேகமான ரயில் சேவைகள் இடைநிறுத்தப் பட்டிருந்ததோடு, இதனால் பயணிகள் பல்வேறு அசெளக ரியங்களுக்கு முகம்கொடுத்தனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத ரயில் சாரதிகளின் உதவியுடன் தூர சேவை ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் கூறியது. இது தவிர ஓய்வுபெற்ற ரயில் சாரதிகளும் கடமைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

விவரம்

 

காதலர் தினத்துக்கு புதிய அர்த்தம் கற்பிக்கும் விதத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்று, பிட்டகோட்டே பிரதேசத்தில் உள்ள வஜிர சிறுவர் இல்லத்திற்கு விஜயம் செய்து வட பகுதியைச் சேர்ந்த அனாதைப் பிள்ளைகளுக்கு புத்தகம் மற்றும் இனிப்புப் பண்டங்களையும் வழங்கி மகிழ்வித்தார். (படம் : கயான் புஷ்பிக)


சமூக வலைத்தள கலாசார சீரழிவிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது மிக முக்கியம்

 

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நான்கு மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கல்லூரி அதிபர் திருமதி எச். எம். யூசுப் நினைவு விருதொன்றை வழங்கி கெளரவிப்பதையும் அமைச்சர்கள் பந்துல குணவர்தன, ஏ. எச். எம். பெளஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர் எ. எச். எம். அஸ்வர், தொழிலதிபர் ரிபாய் ஹாஜியார் உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம். (படம் : சுதத் மலவீர)

 

விவரம்






வட மாகாணத்தின் விவசாய எழுச்சிக்கு ஏற்புடையதாக
விவசாயபீடம் ஒன்றை கிளிநொச்சி பிரதேசத்தில் நிறுவுவேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ