ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40

புலம்பெயர்ந்தோரின் பணம் தமிழ் மக்களின் வாழ்க்கையை சீர்குலைப்பது தவறு

புலம்பெயர்ந்தோரின் பணம் தமிழ் மக்களின் வாழ்க்கையை சீர்குலைப்பது தவறு

1983ம் ஆண்டு இனக்கலவரத்தை அடுத்து வெளிநாடு சென்ற வர்களே புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தங்கள் வீடு, வாசல்களை துற ந்து அவர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று படிப்படியாக அந்நாடுகளில் நிரந்தரமாக வாழும் உரிமையை பெற்று இன்று நல்ல வருமானத்துடன் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு ஜே.ஆர். ஜயவர்தன வின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே அடித்தளம் அமைக்கக் கூடிய வகையில் இனக்கலவரத்தை தூண்டிவிட்டதென்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கும் இவ்விதம் புலம்பெயர்ந்தவர்கள் இலங்கை க்கு தீங்கிழைக்கும் இலட்சியத்துடனேயே தாங்கள் சம்பாதிக்கும் டொலர் நோட்டுகளில் ஒரு சிறு பகுதியை செலவு செய்து வருகி றார்கள்.

பயங்கரவாத யுத்தம் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலும் சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தங்கள் சொந்த காணி, பூமிகளை விற்று ஆட்களை கடத்திச் செல்லும் முகவர்களுக்கு இலட்சக்கணக்கில் பணத்தை வாரி வழங்கி, வெளிநாடுகளுக்கு சென்று அங்கு ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் இப்போது பண செருக்கோடு இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள்.

யாழ்ப்பாண மண்ணில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கடமை, கட்டுப் பாட்டுடன் உழைத்துக் கொண்டிருந்த பொதுமக்களில் பெரும்பாலா னோர் இவ்விதம் வெளிநாடுகளில் தஞ்சமடைந்த பின்னர் தங்கள் உடல் உழைப்பையும் விடா முயற்சியையும் ஒரு பக்கத்தில் மூட் டைக்கட்டி வைத்துவிட்டு, அங்கு கிடைக்கும் வருமானத்தில் குடித்து, கும்மாளம் அடித்து இலங்கையரின் நற்பெயருக்கு அந்நாடுகளில் அப கீர்த்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் விட்டுச் சென்ற தங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகளு க்கு தங்கள் வருமானத்தில் ஒரு சிறு தொகையை மாதாந்தம் யாழ்ப் பாணத்திற்கு அனுப்பி வைத்து அவர்களை வாழ வைத்துக் கொண்டி ருக்கிறார்கள். இந்த வெளிநாட்டுப் பணம் இலகுவில் கிடைப்பதனால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைப்பதை அடியோடு மறந்து இன்று சோம்பேறிகளாக மாறி வெளி நாட்டு பணத்தில் மதுபோத்தல்களை காலி செய்து ஆடம்பர வாழ்க் கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டுப் பணத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இளை ஞர்களும், யுவதிகளுமேயாவர். இவர்களும் இப்போது மது பழக்கத் திற்கும், போதை வஸ்துக்களை உட்கொள்ளும் பழக்கத்திற்கும் அடி மையாகி வருவதனால் யாழ்ப்பாணத்து தமிழர்களின் கட்டுக்கோப்பும், கெளரவமும் இன்று சீர்குலைந்து கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு பணத்தைக் கொண்டு இங்குள்ள தமிழர்கள் கணனிகளை யும், மடிக்கணனிகளையும், விலை உயர்ந்த கையடக்கத் தொலைபேசி களையும், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் போன்றவ ற்றை வாங்கி பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

போதைவஸ்து பாவனையைப் பற்றி சிந்தித்துக்கூட பார்க்க முடியாத இல ங்கையின் வடபகுதியில் இன்று போதைவஸ்து பாவனை ஒரு பெரும் சமூகப்பிரச்சினையாக கூட மாறியிருக்கிறது. இவற்றுக்கான பிரதான காரணம் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் இரத்த உறவுகளுக்காக இங்கு பணத்தை மாதாந்தம் அனுப்பி வைப்ப தேயாகும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் பணம் யாழ்ப்பாணத்து தமிழர்களுக்கு நன்மை செய்வதை விட தீங்கிழைப்பதாக அமைந்திருக்கிறதென்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வேதனை தெரிவித்துள் ளார். வரணி மத்திய கல்லூரியின் 60ஆண்டு பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்கு அனுப்பி வைக்கும் பணத்தினால் புதிதாக உருவாகியுள்ள சமூ கப்பிரச்சினைகளை சமநிலைப்படுத்துவதும் தமது நிர்வாகத்திற்கு இன் னுமொரு தலையிடியாக அமைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி யுள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் பணம் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன் னர் யாழ்ப்பாணத்து மாணவ, மாணவியர் கல்வியில் அதிக கவனம் செலுத்தி பரீட்சைகளில் நல்ல பெறுபேறு பெற்று, பட்டம் பதவிகளு டன் கடந்த காலத்தில் சிறப்புடன் வாழ்ந்து வந்தார்கள்.

இன்று கல்வியில் கவனம் செலுத்தாமல் விடலைப் பருவத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரைப்படங்களை பார்த்து தங்கள் நேர த்தை வீணாக்குவதுடன் கையடக்கத் தொலைபேசி மூலம் காதல் குறும் செய்திகளை அனுப்பி தங்கள் வாழ்க்கையையே நாசமாக்கிக் கொள்கி றார்கள் என்று முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களையும் வாகனங்களையும் செலுத் தும் இளைஞர்களும், யுவதிகளும் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி மாண்டு போவதும் உண்டு. விபத்துக்களில் சிக்காமல் பொலிஸாரிடம் மதுபோதையில் வாகனங்களை செலுத்தி பிடிபடுபவர்கள் தங்கள் பண ப்பலத்தைக் காட்டி பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க எத்தனித்து தண்டிக்கப்படும் சம்பவங்களும் இன்று அதிகமாக இடம்பெறுகின்றன.

இத்தகைய சமூக சீர்குலைவுகள் ஏற்படுத்துவதை புலம்பெயர்ந்த தமிழர் கள் இனிமேலாவது நிறுத்தி, தங்கள் உறவுக்காரர்களுக்கு பணத்தை அனுப்பி அவர்களின் வாழ்க்கை சீர்குலைப்பதை விட வடபகுதியில் ஏதாவது அபிவிருத்திப் பணிகளுக்கு அந்தப் பணத்தை செலவிட வேண்டும். அவ்விதம் செய்தால் யாழ்ப்பாணத்து மக்கள் மீண்டும் கடும் உழைப்பாளிகளாக மாறி தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி