ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

15 ஏக்கர் காடு தீயில் எரிந்து நாசம்

15 ஏக்கர் காடு தீயில் எரிந்து நாசம்

ஹட்டன் சமர்வில் தோட்டத்தில் சம்பவம்

ஹட்டன் சமர்வில் தோட்டத்தில் இனம் தெரியாத விசமிகள் தீ மூட்டியதால் சுமார் 15 ஏக்கர் காடு தீயினால் எரிந்து சாம்பலாகியது.

02.02.2014 மாலை 6 மணியளவிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் பல மணி நேரம் முயற்சியினாலேயே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச கிராம உத்தியோகத்தர் டார்வின் தெரிவித்தார்.

இது தொடர்பில் தெரிய வருகையில் சமர்வில் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள 50 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மானா புல் காடு இனம் தெரியாத விசமிகளினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்திற் கும் கிராம உத்தியோகத்தருக்கும் அறிவித்ததை யடுத்து சம்பவ இத்திற்கு ஹட்டன் பொலிஸாரும் காசல்ரி நீர்த்தேக்க பாதுகாப்பு இராணுவ வீரர்களும் வருகை தந்தனர்.

எனினும் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத போதிலும் சுமார் இரவு 12 மணியளவில் தீயை அணைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ச்சியாக மலையக பகுதிகளில் இவ்வாறான செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் இவ்வாறான விஷமிகளை இனம் கண்டால் உடனடியாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும் பொது மக்களுக்கும் ஹட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி