ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29

கேகாலையில் தேசிய வைபவம் ஜனாதிபதி தலைமை: நகர் விழாக்கோலம்

66வது சுதந்திர தினம்

* 1000க்கும் அதிக பொலிஸார் கடமையில்

* விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

* அணிவகுப்பு மரியாதையில் 3025 படைவீரர்கள் பங்கேற்பு

* வெளிநாட்டு, உள்நாட்டு இராஜதந்திரிகள் உட்பட 3000 பேருக்கு
  விசேட அழைப்பு

இலங்கையின் 66வது சுதந்திர தினம்இன்றாகும் (04). இதனையொட்டிய தேசிய நிகழ்வுகள் கேகாலை நகரில் வெகுவிமர்சையாக கொண்டாட ஏற்பாடாகியுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது பாரியார் சகிதம் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பார். தேசிய நிகழ்வுகளை முன்னிட்டு கேகாலை நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 600 போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விவரம்

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் சுமார் 1000 கைதிகள் இன்று விடுதலை

இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட இருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம தெரிவித்தார்.

விவரம்


அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் 10 வேட்பு மனுக்கள் தாக்கல்

33 சுயேச்சைகள் நேற்று கட்டுப்பணம

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியி டுவதற்காக நேற்றைய தினம் இரண்டு அரசியல் . .  .

விவரம்

காலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு எமது எதிர்காலத்தை தீர்மானிப்போம்

ஜனாதிபதி சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

‘66 ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில், எமது மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணத்தை மீள உறுதிப்படுத்தி, மீண்டும் மேலெழுந்து வரும் காலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு எமது எதிர்காலத்தை நாம் தீர்மானிப்போம்.’

விவரம்

தேசத்தைக் கட்டியெழுப்பும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு ஒன்றுபடுவோம்

‘எமது தாய்நாட்டின் 66 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இன்றைய தினத்தில் இந்தத் தேசத்தைக் கட்டியெழுப்பும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணிக்காக எமது ஒற்றுமையுடன் கூடிய பங்களிப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் அனைவரும் உறுதி பூணுவோம்.’ என பிரதமர் தி. மு. ஜயரட்ன விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

விவரம்

வெற்றிப்பாதையில் முன்னோக்கி செல்ல ஐக்கியத்துடன் செயல்படுவோம்

சகல பாகுபாடுகளையும் புறந்தள்ளி தாய்நாட்டை நேசிக்கும் ஒரே தேசமாக எழுவதற்கு நாம் ஒரு உறுதியான அடித்தளத்தினைக் கொண்டிருக்கிறோம். ஆகவே, வெற்றிப் பாதையில் முன்னோக்கி அடியெடுத்து வைப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது :

விவரம்


66 வது சுதந்திர தினம்




புதிதாக 164 பாடசாலைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 327 கட்டடங்கள் புனரமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலையும் நவீன விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணனி நிலையத்தையும் கொண்டதாக அமைக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ