ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

வட மாகாண சபை தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

வட மாகாண சபை தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

வட மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்தது. மாகாண சபை அதிகாரத்திற்குள் மனித உரிமை தொடர்பாக விடயம் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவித்த மேற்படி அமைப்பு அரசியல் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சங்க இணைப்பாளர் சட்டத்தரணி கபில கமகே, சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமது விடய பரப்பிற்கு அப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை செயற்படுத்துவதானால் அதற்கு ஆளுநரின் அனுமதி தேவை. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வட மாகாண சபை முயன்றால் அதனை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

ஜெனீவா மனித உரிமை மாநாட்டை கருத்திற்கொண்டே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி