ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

வெற்றிப்பாதையில் முன்னோக்கி செல்ல ஐக்கியத்துடன் செயல்படுவோம்

வெற்றிப்பாதையில் முன்னோக்கி செல்ல ஐக்கியத்துடன் செயல்படுவோம்

சகல பாகுபாடுகளையும் புறந்தள்ளி தாய்நாட்டை நேசிக்கும் ஒரே தேசமாக எழுவதற்கு நாம் ஒரு உறுதியான அடித்தளத்தினைக் கொண்டிருக்கிறோம். ஆகவே, வெற்றிப் பாதையில் முன்னோக்கி அடியெடுத்து வைப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது :

சகல இனங்களுக்குமிடையில் இணக்கம், சமாதானம் மற்றும் ஒற்றுமை என்பவற்றுக்கூடாக ஐக்கிய இலங்கைக்கான நீண்டகாலமாக காத்திருந்த எதிர்பார்ப்பானது தற்போது உண்மையானதொன்றாக மாறியுள்ளது. ஒரு கொடியின் கீழ் ஒரு நாட்டுக்கான நீண்டு செல்லும் அடித்தளமானது ஏற்கனவே இடப்பட்டு ள்ளது.

எனினும், இவ் அடித்தளத்தை அழிப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளினால் சதித்திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதலினால் 66 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் இச் சகல எதிர்ச் சக்திகளையும் தோற்கடிக்க ஒன்றுகூடிப் பணியாற்றுவதற்கு நாம் தீர்மானிக்க வேண்டும்.

சவால்களுக்கு முகங்கொடுக்காமல் எந்தவொரு முன்னேற்றமும் அடையப் படுவதில்லை. அத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு சிறந்த தலைமைத்துவமும் மற்றும் மக்களின் வலிமை என்பவற்றின் மூலம் நாம் எப்பொழுதும் வலுப்படுத்தப் படுகின்றோம். தமது தாய் நாட்டினை நேசிக்கும் மக்களினால் நாம் என்றும் ஆசீர்வதிக்கப் படுகின்றோம்.

அவர்கள் அபிவிருத்திக்கான பாதையில் முன்னணி வகிப்பவர்கள். தற்போது, பருத்தித் துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை தீவு முழுவதும் பெளதீக மற்றும் மனிதவள அபிவிருத் தியினை உண்மையாக்குவதற்கு பெருமளவான நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆதலினால், எதிர்கால சந்ததியானது சுபீட்சமான நாட்டிற்கான வாரிசாக இருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

1948 ஆம் ஆண்டில் காலனித் துவத்திலிருந்து பெற்றுக்கொண்டசுதந்திரம் மற்றும் 2009 ஆம் ஆண்டில் பயங்கரவாத ஒழிப்பு என்பன எமது வரலாற்றில் பொன்னால் பொறிக்கப்பட்ட திருப்புமுனைகளாகும். 2009 ஆம் ஆண்டிலிருந்து புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தினை இலங்கை அடையாளப் படுத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டிலிருந்து கடந்த நான்கு வருட காலப்பகுதியில் பொருளாதார மற்றும் சமுதாய மாற்றம் ஒன்று ஏற்படும். அதேவேளை, இலங்கையானது வலுவுற்றுள்ளது.

தெற்காசியாவில் ஒரு முடுக்கிவிடப்பட்ட அபிவிருத்தியினைச் சான்றுப்படுத்தும் நாடொன்றாக இலங்கை தற்போது கருதப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டளவில் பல்வேறுபட்ட துறைகளில் பெருமளவான அபிவிருத்தி இலக்குகளை அடைவதே எமது எதிர்பார்க்கையாகும். ஆதலினால், வெற்றிகொள்ளப்பட்ட மொத்த சுதந்திரத்தினையும் வெற்றிப் பெருமையுடன் பாதுகாக்க சகல இலங்கையரும் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு உயிரினமும் சுதந்திரத்தை விரும்புகின்றது. ஆதலினால், அத்தகைய சுதந்திரத்துக்கு உண்மையான பொருளினை வழங்க நாம் தீர்மானிக்க வேண்டும். தற்போது, சகல பாகுபாடுகளினையும் புறந்தள்ளி தாய்நாட்டை நேசிக்கும் ஒரே தேசமாக எழுவதற்கு நாம் ஒரு உறுதியான அடித்தளத்தினைக் கொண்டிருக்கிறோம். ஆதலினால் இலங்கைத் தாயின் உண்மையான மகன்மார் மற்றும் மகள்மார்களாக இவ் வெற்றிப் பாதையில் முன்னோக்கி அடியெடுத்து வைப்பதற்கு ஒன்றுகூடுவோம்.

அப்பொழுது, தேசிய கொடியானது நாட்டிற்கு மேலாக வானத்தில் சுதந்திரமாகப் பறக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி