ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

தனது இனிப்பு கம்பனியை பிரபல்யப்படுத்த பெயரை மாற்றுகிறார் - ஷரபோவா

தனது இனிப்பு கம்பனியை பிரபல்யப்படுத்த பெயரை மாற்றுகிறார் - ஷரபோவா

உலகின் முன்னாள் முதனிலை டென்னிஸ் வீராங்கனையும், விளம்பரம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனையுமான மரியா ஷரபோவா ரஷ்யாவில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷரபோவா கேன்டி என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் இனிப்பு தயாரித்து பாக்கெட்டுகள் மூலம் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறார். தனது கம்பனியின் இனிப்பு வகைகளை பிரபலப்படுத்த ஷரபோவா அதிரடி திட்டத்தை தீட்டி இருக்கிறார்.

வருகிற 26 ஆம் திகதி முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நடைபெறும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மட்டும் ஷரபோவா தனது பெயரை ‘சுகர்போவா’ என்று மாற்றி களம் காண முடிவு செய்து இருக்கிறார். அத்துடன் தனது உடையில் கம்பனியின் லோகோவையும் (சிவப்பு நிறத்திலான வாய்) பயன்படுத்த உள்ளார்.

இதற்காக ஷரபோவா அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள உச்ச நீதிமன்றை அணுகி இருக்கிறார். உச்ச நீதிமன்றில் தனது பெயரை அவசரமாக, மரியா சுகர்போவா என்று மாற்றி கொள்ள அனுமதி கேட்டு மனு செய்து இருக்கிறார். நீதிமன்றம் அனுமதி கிடைத்ததும், அவர் அமெரிக்க பகிரங்க போட்டி அமைப்பாளர்களின் அனுமதியையும் பெற காய் நகர்த்தி வருகிறார். ஷரபோவாவுக்கு பெயரை மாற்ற அனுமதி கிடைக்கிறதோ? இல்லையோ? ஆனால் பெயர் மாற்ற முயற்சிலேயே அவர் மனதில் நினைத்ததை விட அதிக விளம்பரம் கிடைத்து விடும் போலும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி