ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200

உண்மை நிலையை அறிவதற்கு இலங்கை வந்த இந்திய ஊடகவியலாளர்களை பாராட்டுகிறோம்

உண்மை நிலையை அறிவதற்கு இலங்கை வந்த இந்திய ஊடகவியலாளர்களை பாராட்டுகிறோம்

சர்வதேச தொலைக்காட்சி சேவைகள், இணையத்தளங்கள், பத் திரிகைகள் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தப்ப பிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செய்திகளை திரி த்து கூறுவதனால் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் இல ங்கை அரசாங்கம் யுத்தம் முடிவடைந்து நாலாண்டுகளுக்கு பின் னரும் இலங்கைத் தமிழர்களை கொடுமைப்படுத்தி வருகிறதெ ன்று பூரணமாக நம்பி இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை எந்நேரமும் கண்டித்து வருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள சில சுயமாக சிந்தித்து செயற்படக்கூடிய 30பேர் அடங்கிய ஊடகவியலாளர் குழுவொன்று நாட்டின் பல்வேறு பகு திகளுக்கும் சென்று சர்வதேச ஊடகங்கள் இலங்கை பற்றி வெளி யிடும் தகவல்கள் உண்மையானவையா? என்பதை அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி தெரிந்து கொண்டார்கள். இலங்கை அர சாங்கம் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களை அன் போடு அரவணைத்து உதவிகளை செய்து வருவதை இந்திய ஊடகவியலாளர்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய ஊடகவியலாளர்கள், வடபகுதி தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்க ளில் உண்மையில்லை என்பது நேரில் வந்து பார்த்தவுடன் புரிந்து கொண்டோம் என்றும், இலங்கை தொடர்பாக தாங்கள் கொண்டி ருந்த அபிப்பிராயம் பிழையானது என்று புரிந்து கொண்டோம் என்றும் தெரிவித்தார்கள்.

இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பாலபாஸ்கர் தலைமை யில் வடக்கு, மாத்தளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகு திகளுக்கு சென்று நிலைமைகளை கண்டறிந்ததுடன், அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தனர். ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்த நிலை முற் றாக மாறி, இன்று அமைதியான சூழல் ஒன்று காணப்படுகின்றது. வடக்கில் உள்ள மக்கள் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து திருப்தியடைந்துள்ளனர். வீதிகள், பாடசாலைகள் உள்ளி ட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த மக்களின் உண்மையான நிலையை உலகத்திற்கு வெளிப் படுத்துவதற்கு பதில், உண்மைக்கு மாறான தகவல்களே சர்வதேச ஊடகங்கள் வெளியிடுகின்றன.

இலங்கைக்கு வர முன்னர் வடபகுதி தொடர்பாக இருந்த எமது நிலை ப்பாடு நேரில் வந்து பார்த்ததும் முற்றாக மாறியுள்ளது. நாம் எதிர்பார்த்ததைவிட இப்போது பன்மடங்கு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை பார்த்து நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்று பாலபாஸ்கர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது வடபகுதி மக்கள் இந்திய அரசாங்கமோ, அல்லது இந்திய அரசியல்வாதிகளோ இலங்கையின் உள்விவகா ரங்களில் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார்கள். எங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நேர்மையான நல்லாட்சி குறித்து பூரண நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, இந்தியாவோ, இந்திய அரசியல் வாதிகளோ எங்களுக்காக பரிந்து பேசி வடபகுதியில் தற்போது ஏற்பட்டிருக்கும் அமைதியையும் மக்களின் நிம்மதியான வாழ்க் கையையும் சீர்குலைப்பதை தாங்கள் விரும்பவில்லை என்று இந்திய ஊடகவியலாளர்கள் கொழும்பில் நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டில் வலியுறுத்தினார்கள்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் பற்றி கருத்து தெரிவித்த இந்திய ஊடகவியலாளர்கள், தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிக ளின் தனிப்பட்ட இலாபம் தேடும் செயற்பாடுகள் காரணமாவே இலங்கை தொடர்பான உண்மைக்கு மாறான விமர்சனங்கள் அங்கு முன்வைக்கப்படுகின்றன. இதனை ஒட்டுமொத்த இந்தியர்க ளின் நிலைப்பாடாக எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. இந்தியா வின் 100கோடி சனத்தொகையில் தமிழகத்தில் 6 கோடி பேரே உள்ளனர். அதிலும் ஒரு சிறிய பகுதியினரே தங்கள் சுயநலத்திற் காக இலங்கை மீது அவதூறான விமர்சனங்களை செய்கிறார்கள். இதைப்பற்றி நாம் கவலைகொள்ளக் கூடாதென்று இங்கு வந்த இந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள்.

இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் மலையகப் பகுதியில் குறைந்தள விலான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவது குறித்து தங்களுக்கு திருப்தியில்லை என்று தெரிவித்த அவர்கள், மலையகத்தில் கூடு தலான அளவு வீடுகளை நிர்மாணிக்க வேண்டுமென்று இந்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்க இருப்பதாக கூறினார் கள்.

நாம் எங்கள் தாய்நாட்டுக்கு திரும்பியவுடன் இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்களை இலங்கைக்கு சென்று உண்மை நிலையை அறிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்த உள்ளோம். எங்களைப் போன்று பெரும்பாலான இந்திய ஊடக வியலாளர்கள் இங்குவந்து உண்மையை அறிந்து கொண்டால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் இலங்கை பற்றிய போலிப் பிரசாரங்களுக்கு எதிராக நிச்சயம் கண்டனக் குரல் எழு ப்புவார்கள் என்றும் இந்திய ஊடகவியலாளர்கள் கருத்து தெரி வித்தார்கள்.

இந்த முன்மாதிரியான 30 இந்திய ஊடகவியலாளர்களைப் போன்று பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சி மாநாடு பற்றிய செய்திகளை எழுதவரும் நூற்றுக்கணக்கான சர்வ தேச ஊடகவியலாளர்கள் உச்சிமாநாடு முடிவடைந்த பின்னர் இலங்கையின் நாலா பக்கங்களுக்கும் சென்று உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு பின்னர் அவர்கள் சர்வதேச ஊடகங்களில் உண்மை நிலையை அறிவிக்கும் போது இலங்கைக்கு எதிரான போலிப் பிரசாரங் களை செய்யும் வெளிநாட்டில் உள்ள தேசத்துரோக கும்பல்கள் வாயடைத்து மெளனம் சாதிக்க வேண்டிய ஒரு சாதகமான சூழ் நிலை விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி