ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர புதிய யோசனை

* மீனவர்களை விடுவித்து வள்ளங்களை தடுத்து வைத்தல்

* கூட்டு நடவடிக்கை குழுவை மீண்டும் செயற்படுத்தல்

* தமிழ் நாட்டு முதலமைச்சரின் இரட்டை நிலைப்பாட்டை களைதல்

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீன்பிடி வள்ளங்களை கைப்பற்றி தடுத்து வைத்துக் கொண்டு மீனவர்களை மட்டும் உடனடியாக விடுதலை செய்யும் விதத்தில் புதிய நடைமுறையொன்றை கொண்டு வருவது பற்றி கடற்றொழில் அமைச்சு ஆலோசித்து வருவதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக மீனவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்களை விடுதலை செய்வதுடன் அவர்களது வள்ளங்களை தடுத்து வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக நடைமுறை யொன்றை கடைப்பிடிக்க கூடியவாறு தேவையான சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விவரம்

மொறகஹகந்த மற்றும் ஏனைய மகாவலி கருத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்திலும் வடமத்திய மாகாணத்திலும் வாவிகளுக்கு
மேலதிக நீரை வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டும்

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் செய்திகள் எழுதும் போதும் தகவல்களை வெளியிடும் போதும் ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடனும் கவனமாகவும் செயற்பட வேண்டும் என்று பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கேட்டுக்கொண்டார். நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலனை கருத்திற்கொண்டே இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விவரம்

தனது கணவன் (எழிலன்) செய்த தவறுக்காக தமிழரிடம் ஆனந்தி மன்னிப்பு கோர வேண்டும்

பேரழிவுக்கு துணைபோன ஆனந்தி இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்

தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்னர் தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடமும் பகிரங்க பொது மன்னிப்பை ஆனந்தி எழிலன் கோரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர். சிவராஜா.

விவரம்

 

மேல் மாகாணத்திலுள்ள அரச நிறுவனங்களின் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தரும் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக மேல் மாகாண பிரதான காரியாலயத்தில் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அமைச்சர் உதயகம்மன்பில ஆகியோரால் கெப் வாகனங்கள் மற்றும் வேன்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம். (படம்: சமன் சிறிவெதகே)


 

 


செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரட்ண, பிரதியமைச்சர் சரத் குமார குணரட்ண