ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

தனது ஆஸி. காதலியை கரம்பிடித்தார் அக்ரம்

தனது ஆஸி. காதலியை கரம்பிடித்தார் அக்ரம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் (47), தனது 30 வயதான அவுஸ்திரேலிய காதலி தாம்சன் ஷனீராவை மணந்ததாக நேற்று அறிவித்தார்.

லாகூரில் சென்ற 12 ஆம் திகதி எளிமையாக நடந்த விழாவில் நான் ஷனீராவை திருமணம் செய்துகொண்டேன். இது எனக்கு எனது மனைவி, மகன்களுக்கும் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் மக்கள் தொடர்பு ஆலோசகரான காதலி ஷனீராவிடம் வசிம் அக்ரம் திருமணம் செய்துகொள்வது குறித்து கடந்த மாதம் பேசினார்.

இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

அவரது முதல் மனைவி ஹ¥மா நோய்வாய் பட்டநிலையில் 2009 ஆம் ஆண்டு சென்னையில் இறந்தார். உடல் நிலை சரியில்லாத தனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்பவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழ்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று மதபோதகர் கூறியதை அடுத்தும் இந்த திருமணம் நடந்தது என்று கூறப்படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி