ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

சமூக மேம்பாட்டுக்கு மகத்தான பணிசெய்த மகோன்னத தலைவர் சேர் ராசிக் பரீத்

முஸ்லிம் மக்களின் முடிசூடா மன்னன்

சமூக மேம்பாட்டுக்கு மகத்தான பணிசெய்த மகோன்னத தலைவர் சேர் ராசிக் பரீத்

இன்று அவரின் நினைவு நாள்

29 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாம் மர்ஹும் சேர் ராசிக் பரீத் என்ற உத்தமமான ஒரு மனிதரை நினைவு கூருகிறோம் என்றார். அந்த மாமனிதர் விசேடமானவராகத்தான் இருக்க வேண்டும்.

நிச்சயம் அவர் சிரேஷ்ட மனிதர்தான்!

"சேர் ராசிக் பரித்" என்ற நாமம் இலங்கையின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பதித்துவிட்ட உயரிய நாமமாகும்.

சேர். ராசீக் பரீத் பெரும் தலைவர், அரசியல் வழிகாட்டி; தான் சார்ந்த சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலை வர்.

சிரேஷ்ட, நேர்மைமிக்க, நாணயம் நிறைந்த ஒரு நல்ல அரசியல் தலைவர்.

சவையால் புகழ்பூத்த இத்தலைவர் உயர் பதவிகளை வெறுமனே அலங்கரிக்கவில்லை.

பதவிகள் மூலம் மகத்தான சேவை செய்தார். அதனால் தான் இத்தலைவர் இன்றும் என்றும் நம் நினைவில் வாழ்கிறார்.

கொழும்பு மாநகரசபை உறுப்பினராக, அரச சபை உறுப்பினராக, இரண்டாம் உலக போர்க் காலத்தில் பாதுகாப்புக் குழு உறுப்பினராக மேலவை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, பிரதி சபாநாயகராக, அமைச்சராக ஈற்றில் வெளிநாட்டுத் தூதுவராக என்றெல்லாம் சேர் ராசீக் பரீத் பதவிகளைப் பெற்று சேவை புரிந்தார்.

கல்வி மேம்பாட்டின் மூலம், குறிப்பாக முஸ்லிம் பெண்கல்வி வளர்ச்சி மூலம், சமூகம், உயர்ச்சி காணுமென கருதிய சேர் ராசிக் பரீத், கொழும்பில் பம்பலப் பிட்டியில் முஸ்லிம் மகளிர் கல்லூரியை உருவாக்கினார்.

தமது சொந்தக் காணியையும், பணத்தையும், கட்டடத்தையும் இக்கல்லூரி உருப்பெறுவதற்கான நன்கொடை செய்தார்.

முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்குவதிலும் இவர் காத்திரமான பணி செய்தார். முஸ்லிம் ஆசிரியர் நியமன விடயத்திலும் ஆர்வமாகப் பணி செய்தார்.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களே நிய மிக்கப்பட வேண்டுமென வலி யுறுத்திய சேர். ராசீக் பரீத், முஸ் லிம் ஆசிரியர்களின் பயிற்சிக்கான ஆசிரியர் கலாசாலைகள் உரு வாக்கப்படுவதிலும் பாடுபட்டார். அட்டாளைச்சேனை, அளுத்கமை ஆகிய இடங்களில் ஆசிரியர் கலாசாலைகள் உருவாகின.

சேர். ராசீக் சுதந்திரப் போரா ட்டத்தின் சுவிசேஷப் பங்காளி களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

முன்மாதிரியான தலைவராக விளங்கிய இவர் முஸ்லிம் ஆசிரி யர்களுக்காக முதல் முதலில் தொழி ற்சங்கமும் உருவாக்கினார்.

அரபு மொழி போதிப்பதற்காக மெளலவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டுமென 1936ல் அரச சபையில் பிரேரணை கொண்ட வந்த சேர் ராசிக் பரீத்தின் முயற்சியினால் அரபு ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள் ளப்பட்டன.

அரபுக் கல்வி அதிகாரிகள் நியமனம் பெற்றனர். பல்கலைக்கழகத்தில் அரபு மொழித்துறை ஆரம்பமானது.

இலங்கை சுதேச மருத்துவ கல்லூரியில் முஸ்லிம்களின் பரம்பரை மருத்துவ முறையான யூனானி மருத்துவ முறையின் வளர்ச்சிக்கும் வழி செய்த இப்பெரியார் யூனானிப் பிரிவையும் உருவாக்கினார்.

இப்பிரிவை மூடிவிட, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சேர் ராசீக்கின் முயற்சியால் அது நிறுத்தப்பட்டது.

இன்று இப்பிரிவு மூலம் யூனானி வைத்திய முறை அரசின் உதவியுடன் புத்துயிர் பெற் றுள்ளது.

கோட்டை தலைநகரில் கம்பீரமாகக் காட்சிதரும் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் சோனக மக்களின் புகழை நிலைநாட்டிக் கொண்டு மிளிர் கிறது.

அகில இலங்கை சோனகர் சங்கத்தின் தலைவராகவும், முஸ்லிம் கவுன்சிலின் தலை வராகவும் சேர் ராசீக் பரீத் ஆற்றிய பணிகள் பாராட்டத் தக்கது.

'பல்டிக்நானா' என்றும் ஒரு காலத்தில் அவர் வர்ணிக் கப்பட்டார்.

நான் பல்டிக் அடித்ததெல்லாம் சொந்த நன்மைக்கல்ல; சமுதாய நன்மைக்கே எனக் கூறி பெருமிதமும் மனநிறைவும் கொண்ட இந்த நேரிய தலைவர் சகல இனத்தவர்களாலும் கெளரவமாக மதிக்கப்பட்டார்.

சிங்கள - சோனக நல்உறவைக் கட்டிவளர்த்த இவர் "சோனக நல் உறவுகளைக் காட்டிவளர்த்த இவர் "சோனக மக்களின் முடிசூடா மன்னராகக் போற்றப்பட்டார்.

இப்பெரியார் நினைவாக உருவான சேர் ராசீக் பரீத் மன்றமும் நீண்ட காலமாக சேர் ராசீக் பரீத் நினைவுகளை நிலைநிறுத்தியே வருகிறது.

இத்தலைவரின் முன்மாதிரியான வாழ்வு வளம் இளம் தலை முறையினருக்கு மகத்தான படிப் பினைகளைப் புகட்டிக் கொண்டே இருக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி