ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

13 புதிய சாதனையுடன் நிறைவு பெற்ற கனிஷ்ட மெய்வல்லநர் போட்டி

13 புதிய சாதனையுடன் நிறைவு பெற்ற கனிஷ்ட மெய்வல்லநர் போட்டி

ஜோன் டாபர்ட்

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் றிட்ஸ்பரி அனுசரணையுடன் அண்டையில் ஹோமாகம தியகம விளையாட்டரங்கில் 46வது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியை இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை நீர்கொழும்பு மரியா கன்னியா மடம் மற்றும் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை நடப்பு சம்பியனான நீர்கொழும்பு மரிஸ்டெலா கல்லூரியும் வென்றன.

இப் பரிசளிப்பு நிகழ்வானது சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரும், குழும பணிப்பாளருமான நந்தன விக்ரமகேயின் ஆதரவின் கீழ் நடைபெற்றது.

74 புள்ளிகளுடன் நீர்கொழும்பு மரிஸ்ஸ்டெலா கல்லூரி நடப்பு சம்பியன் பட்டத்தையும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 71 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், கொச்சிக்கடை லொயொலா கல்லூரி 57 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றன. இதற்கிடையே பெண்கள் பிரிவில், ஆவே மரியா கன்னியர் மடம் 98 புள்ளிகளுடன் சம்பியன் பட்டத்தைப் பெற்றதுடன், குருநாகல் மலியதேவ பெண்கள் பாடசாலை மற்றும் நீர்கொழும்பு நியுஸ்டிட் பாடசாலை ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றன.

“இலங்கையின் விளையாட்டு நாட்காட்டியில் மிக முககிய நிகழ்வான இப்போட்டிக்கு அனுசரணை வழங்கியதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இப் போட்டிகளில் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டதுடன், பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் வெற்றிக் கிண்ணங்களையும் வென்றெடுத்தனர். 44வது சேர். ஜோன் டாபாட் கனிஷ்ட மெய்வல்லநர் போட்டிகளுக்கு வழங்கிய அனுசரணை மூலம் பல மாணவர்களுக்கு தங்கள் விளையாட்டு திறமைகளை வெளிப்படு த்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

றிட்ஸ்பரியானது நாடு முழுவதும் உள்ள திறமைகளுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன், இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சங்கம் மற்றும் நாட்டின் ஏனைய விளையாட்டு கழகங்களுடனான தனது பங்காண்மையை தொடர எண்ணியுள்ளது” என சிபிஎல் புட்ஸ் இன்டர்நெஷனல் (பிரைவட்) லிமிட்டெட்டின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் டி. சில்வா தெரிவித்தார்.

நான்கு நாட்கள் தீவிரமாக நடைபெற்ற போட்டிகளின் இறுதியில், கம்பளை ரத்னாவளி பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த சுசிமா ராஜபக்ஷ மற்றும் லைசியம் சல்வதேச பாடசாலையைச் சேர்ந்த வருண அத்தனாயக்க ஆகியோருக்கு அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

றிட்ஸ்பரி வர்த்தனநாமமானது தொடர்ச்சியாக இலங்கையின் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன், தேசிய கனிஷ்ட ஸ்கொஷ் சம்பியன் தொடர், சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான உள்ளக உதைபந்தாட்ட போட்டிகள் உள்ளக சர்வதேச பாடசாலை மற்றும் வணிக மெய்வல்லுநர் போட்டிகள் போன்றவற்றிற்கு நிரந்தர அனுசரணையை வழங்கி வருகிறது. மேலும் றிட்ஸ்பரி வர்த்தக நாமத்தின் மூலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி