ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
நாளை நாம்

நாளை நாம்

உழவன் ஒருவன் காட்டில் தனியாகக் குடிசை போட்டுக் குடியிருந்தான். திடீரென்று புயலும் மழையும் அடிக்கத் தொடங்கியது. அவனால் வெளியே செல்ல முடியவில்லை. மழை பல நாட்கள் நீடித்தது.

அவனும் அவன் குடும்பத்தாரும் குடிசையில் இருந்த ஆடுகளை எல்லாம் உணவிற்காக அடித்துக் கொன்றார்கள்.

ஆடுகள் தீர்ந்ததும் மாடுகளைக் கொன்று தின்னத் தொடங்கினார்கள்.

இதைப் பார்த்த நாய்கள் அஞ்சின. அங்கிருந்த கிழ நாய் ஒன்று மற்ற நாய்களைப் பார்த்து, "மிகவும் பயன்படக் கூடிய மாடுகளையே உழவன் கொன்று தின்னத் தொடங்கி விட்டான். நாமும் இங்கே இருந்தால் உணவாக வேண்டியதுதான். இப்பொழுதே நாம் அனைவரும் தப்பித்து ஓடிவிடுவோம்" என்றது.

அதன் பேச்சைக் கேட்ட நாய்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி