ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 
இலங்கை நீரியல் வளத்துறை முகாமைத்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரியோகுரோமிஸ் மொசாம்பிக்ஸ் ......

இலங்கை நீரியல் வளத்துறை முகாமைத்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரியோகுரோமிஸ் மொசாம்பிக்ஸ் (ஜப்பான் கொறளி) இன மீன்

மீன்பிடி பணிப்பாளர், விவசாய அமைச்சு, கிழக்கு மாகாணம்.

இலங்கையில் குடியேறிய போதெல்லாம் நீர் நிலை களுக்கு அண்மையிலேயே குடியேறினர். மனிதன் போசாக்கிற்கு முதலிடம் வழங்கியமையே இதற்கு பிரதான காரணமாகும். 1950க்கு முன் பாக இலங்கையில் உள்நாட்டு மீன் பிடி ஒரு சுயதேவைப் பூர்த்தியினை அடிப்படையாக கொண்டிருந்தது.

தென் மேல் வடமேல் பருவப் பெயர்ச்சிக் காற் றுக்களின் தாக்கத்தினால் கடற்கலங்களில் சென்று மீன்பிடி மேற்கொள்ள முடி யாத நிலை காணப்பட்டது. இதன் விளைவாக அருகிலுள்ள நீர்நிலைகளில் இருந்து மீனைப் பிடித்து உண்ணத் தொடங்கினர். இத்தகைய நீர்நிலைகள் பெரும்பாலும் கோயில்களையும் பெளத்த விகாரைகளையும் அண்டியே காணப்பட்டன.

இதற்கு மூல காரணம் நீர் நிலைகளை அண்டி வாழ்ந்த மக்கள் நீர் நிலைகளிலிருந்தே மண்ணை அகழ்ந்தெடுத்து கோபுர வடிவில் குறிப்பிட்ட இடத்தில் உயரமாக குவித்து தெய்வ வழிபாடுகள் நடத்தினர். காலப்போக்கில் அதுவே வழக்கமாகியதும் தமது அன்றாட நடவடிக்கைகளுக்கும் நீர் நிலைகளைப் பயன்படுத்த தொடங்கினர் இக் காலகட்டத்தில் பிடிக்கப்பட்ட மீன்க ளில் சுயதேவைப் பூர்த்தியின் பின் மேலதிகமானவை தானமாக (arசீs giving) பெளத்த விகாரைகளுக்கு வழங்கப்படன. இந்த நடைமுறை தற்போதும் வழக்கிலிருப்பதைக் காணலாம்.

இக்காலகட்டத்தில் நீர் நிலைகளில் அகதிகளவில் உள்நாட்டு மீனினங்களே (ழிoணீal ஷிpலீணீiலீs) காணப்பட்டன. இவற்றில் பெரும்பா லானவை ஊன் உண்ணும் (ணீarnivorous) வகையினைச் சார்ந்தவை. இவை அள வில் சிறியவையாகவும், எதிரிகளிட மிருந்து தப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டவையாகவும், சிறு மீன்கள், வண்டுகள், பூச்சிகள், தவளைகள் என்பனவற்றைப் பிடித்து உண்ணக்கூடிய வகையிலும் வழக்கும் தன்மை, கறுப்பு நிறம், கூரிய பற்கள், முட்கள், முதலிய இயல்புடனும் காணப்பட்டன. இதனால் மக்களிடம் இம்மீன்கள் தொடர்பான நுகர்வுத் தன்மை அதிகளவு காணப்படவில்லை.

மேலும் கூடுதலான மீனினங்கள் ஊனுண்ணிகளாக விளங்கியதனால் நீர் நிலைகளில் தவார உணவின் கிடை தன்மை அதிகரித்துக் காணப் பட்டது. இதற்கு இன்னுமொரு காரணம் நீர்நிலைகளுக்கு அருகில் செய்கை பண்ணப்பட்ட நெல் நிலங்க ளும், வயல்களும் நீர்நிலைகளைச் சுற்றி அமைக்கப்பட்ட கால்நடைப் பண்ணை களும் நீர்நிலைகளும் அதிகளவு சேதன வளத்தை வழங்கி சிறு தாவ ரங்கள் அதிகளவு அங்கு வளர வழி வகை செய்தமையாகும்.

இதனால் தாவர உண்ணிகளுக்கான உணவு நீர்நிலைகளில் அதிகமாகவே காணப் பட்டது. இச்சந்தர்ப்பத்தில் தான் 1951ம் ஆண்டு காலப் பகுதியில் அனைத்து முண்ணியான (லிசீnivorous) ஆபிரி க்க இனமான ஓரியோகுறோமிஸ் மொசாம்பிக்கஸ் (லிrலீoணீhroசீis ணிossaசீbiணீus) (ஜப்பான் கொறளி) என்னும் ஆபிரிக்க நாட்டினைச் சேர் ந்த மீனினம் முதன் முதலில் வெளி நாட்டினமாக (ரிxotiணீ ஷிpலீணீiலீs) இலங்கையில் அறிமுகம் செய்யப் பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி