ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் மாதம் பிறை 25
நந்தன வருடம் மார்கழி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY  ,JANUARY, 08, 2013
வரு. 80 இல. 07
 
கோபியோ மாநாடு நாளை கொச்சினில் ஆரம்பம்

கோபியோ மாநாடு நாளை கொச்சினில் ஆரம்பம்

கோபியோ மாநாடு இன்று 8ம் திகதி முதல் 10 வரை கேரள மாநிலத்தின் கொச்சினில் நடைபெறுகிறது. உலகெங் கிலும் வாழ்கின்ற சர்வதேச அமைப்புக் களைச் சார்ந்த இந்திய வம்சாவழியின ரின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், கேரள முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள், கல்விமான்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகளும் கொச்சின் சென்றுள்ளனர்.

கோபியோ (GLOBAL ORGNIZATION PEOPLE OF INDIAN ORGIN) அமைப்பு 1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி நிவ்யோர்க் நகரில் வைத்து வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் விசேட மாநாடுகளும் வைபவங்களும் தொடர்ந்து பாரிஸ், மொரிசியஸ், சிங்கப்பூர், மலேசியா தென்னாபிரிக்கா போன்ற பல நாடு களிலும் நடைபெற்றுள்ளன. மிக நீண்டகாலமாக உலகின் பல நாடுகளிலும் இந்திய வம்சாவழியினர் பெரும் எண்ணிக்கைகளில் வாழ்கின்றனர்.

எனவே உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இந்திய வம்சாவழி மக்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டி தாயகத்தோடு காத்திரமான பங்களிப்பு டன் அவர்களது அரசியல் சார்பற்ற சமூக பொருளாதார மற்றும் கலாசார ரீதியான அபிலாசைகளை மேம்படுத்து வதும் விழிப்புணர்வுடன் துறைசார் நிபுணத்துவ வழிகாட்டலை வழங்குவ துமே கோபியோவின் பிரதான நோக் கங்களாகும்.

இலங்கையிலும் கோபியோ அமைப் பானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அதன் செயற்பாடுகளை முன் னெடுத்து வந்துள்ளது. முன்னாள் இந்து கலாசார அமைச்சர் பி.பி. தேவராஜ் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பலர் இந்த நடவ டிக்கைகளுக்காக கடமையாற்றியுள்ளனர். 2008 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற மாநாட்டின் போது கோபியோ சர்வதேச அமைப்பின் தலைவராக பி.பி. தேவராஜ் தெரிவாகி யிருந்தார்.

கோபியோவின் இலங்கை அமைப் பின் கடுமையான முயற்சியின் காரண மாக இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கும் வெளிநாட்டு இந்திய பிரஜாவுரிமைச் சட்டத்தின் கீழ் (Overseas Citizenship of india)  வழங்கத் தீர்மானித்தது. எனவே இந்திய மத்திய அரசு ஊடாக இலங்கையில் அவ்வாறானவர்களுக்கு (OIC)  சலுகையினை பெற்றுக்கொடுப் பதில் பி.பி. தேவராஜ் வழங்கியுள்ள காத்திரமான பங்களிப்பு முக்கியமான தாகும். மேலும் இந்திய மத்திய அரசின் நேரடியான கவனத்தின் கீழ் இலங்கை இந்திய தூதரக அதிகாரி களின் அனுசரணையுடன் கல்வி மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதிலும் இலங்கையின் கோபியோ கிளையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொச்சினில் இன்று ஆரம்பமாகின்ற கோபியோ மற்றும் பீபீடி நிகழ்வுகளில் இலங்கையிலிருந்து சுமார் 50 பிரதிநிதி கள் கலந்து கொள்வதோடு ஆய்வுக் கட்டுரைகளும் முன்வைக்கப்படவுள் ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒவ்வொரு மாநாட்டின் போதும் முக்கியமான விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழமையாகும். அந்த வகையில் 2010 சர்வதேச இந்திய வம்சாவளி மக்கள் மகா சபையின் 10வது மாநாடு தென்னாபிரி க்கா டர்பானில் நடைபெற்ற போது பின்வரும் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1 வெளிநாட்டு இந்தியப் பிரஜாவுரிமை நான்கு தலைமுறை களை உள்ளடக்க வேண்டும்.

ஒருவர் வெளிநாட்டு இந்தியப் பிரஜாவுரிமை பெற்றால் கணவன் அல்லது மனைவி வெளிநாட்டு பிரஜையாக இருந்தாலும் இந்திய பிரஜாவுரிமைத் திட்டம் அவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு இந்தியப் பிரஜாவுரிமை பெற்றவர்களின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு இந்தியப் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்திய அரசாங்கம் வெளிநாட்டு இந்தியப் பிரஜாவுரிமை, ஜியிலி அடை யாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மேலும் பல அனுகூலங்களை அளிப் பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கின் றது. அவை அமுல்படுத்தப்படும் போது மாநாடு முன்வைத்துள்ள கோரிக்கைகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டது.

தீர்மானம் - 2 வெளிநாட்டு இந்தியர் கள் தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக வெளிநாட்டு இந்திய ஒத்தாசை நிலையத்தை (Overseas indian Facilities Centre) வெளிநாட்டு இந்திய விவகார அமைச்சில் நிறுவியிருப்பதை மாநாடு வரவேற்கின்றது.

மத்திய அரசின் பல்வேறு பொறுப் புக்களில் சிலவற்றை மாநில அரசாங் கங்கள் கவனித்து வருகின்றன. வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவழி மக்கள் சம்பந்தமான பல முக்கியமான விடயங்கள் மாநில அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ளது. எனவே மாநில மட்டங்களிலும் உரிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவும் வகையில் ஒத்தாசை அமைப்புக்கள் இருக்க வேண்டிய அவசியத்தை மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 3 ஆபிரிக்க நாடுகளுக்காகத் தென்னாபிரிக்காவில் ஒரு சிறிய வெளிநாடு வாழ் இந்தியர் தினம்  (Mini PDP)  நடத்தவிருப்பதை மாநாடு வரவேற்கின்றது.

தீர்மானம் - 4 மொaசியஸ், மலேசியா போன்ற நாடுகளில் இந்திய அரசாங்கம் இந்தியக் கலாசார நிலையங்களைத் தோற்றுவித்திருக்கின்றது. தென்னாபிரிக்காவிலும் இந்தியக் கலாசார நிலையங்களை அமைக்குமாறு இந்திய அரசுக்கு மாநாடு வேண்டுகோள் விடுக்கின்றது.

தீர்மானம் - 5 இந்தியப் பிரதமரால் அமைக்கப்பட்டிருக்கும் வெளிநாடு வாழ் இந்திய ஆலோசனைக்குழுவில் கோபியோவின் பிரதிநிதியை உள்ளடக்குமாறு மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. 1999 ஆம் ஆண்டில்  (PIO (card) அட்டைத் திட்டம் அறிமுகமாகியது. இது 2002 ஆம் ஆண்டில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு திருத்தப்பட்டது.

இந்தத் திட்டம் வெளிநாடு வாழ் இந்திய வம்சாவழியினருக்கு ஒரு PIO (car) அட்டை வைத்திருப்பவர்கள் வெளிநாட்டில் வாழ்கின்ற இந்திய பிரஜைகளுக்குரிய பல்வேறு அனுகூலங்களைப் பெறுவதற்கு வாய்ப்பளித்துள்ளது. இந்தியாவில் விவசாய, பெருந்தோட்ட நிலங்களைத் தவிர சொத்துக்கள் வாங்குவதற்கும் தங்கள் வசம் வைத்திருப்பதற்கும் பிறருடைய பெயருக்கு மாற்றுவதற்கும் விற்கவும் உரிமை உண்டு.

வெளிநாட்டில் வாழும் இந்திய பிரஜைகளுக்கு என்ன சலுகைகள் கொடுக்கப்படுகின்றதோ அதே சலுகைகள் இந்திய வம்சாவழியினருக்கும் கொடுக்கப்படும். அதாவது வைத்திய, பொறியியல், தொழில்நுட்ப முகாமைத்துவ கல்லூரிகள் உட்பட சகல கல்வி நிறுவனங்களிலும் இந்திய வம்சாவழியினர் பிள்ளைகளுக்கும் அதேவிதமான அனுமதிகள் கொடுக்கப்படும்.

2005 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு இந்திய பிரஜாவுரிமை (Overseas Citizenship of India) திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் ஏதாவது ஒரு விதத்தில் இரட்டைப் பிரஜாவுரிமையை ஏற்றுக்கொள்ளும் நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. PIO Card  அடையாள அட்டை உள்ளவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்திய பிரஜாவுரிமை  (Overseas Citizenship of India) திட்டம் பெற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.

ஆனால் ஒரு வித்தியாசம் என்னவெனின் அடையாள அட்டை நான்கு தலைமுறைகளை உள்ளடக்குவதாகவும் கணவன், மனைவியோ வேறு ஒரு நாட்டின் பிரஜயாக இருந்தாலும் கூட அவர்களையும் உள்ளடக்குவதாக இருந்தது. இந்த இரண்டு திட்டங்களுக்கிடையில் இத்தகைய வேறுபாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவற்றில் அனேகமானவை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த மாநாட்டில் தென்னாபிரிக்க பிரதமர் Zulu King Zwelithini உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல நாடுகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கொச்சினில் கோபியோ மாநாடு நடைபெறுவதன் காரணமாக கேரள மாநிலத்திற்கு தனிச் சிறப்பு ஏற்படுகிறது. இந்திய மாநிலங்களை பொறுத்தவரையில் கேரளா இயற்கை வளங்கள் நிறைந்த எழில் மிகு அழகு தோற்றமுடைய பகுதிகளைக் கொண்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்னதான காலம் தொட்டு கேரள மக்கள் தங்களது பாரம்பரிய கலாசார விழுமியங்களை கட்டிக் காப்பதிலும் அறிவுசார் சமூகமாக தங்களை வளர்த்துக்கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.

மொத்த சனத்தொகையில் 90 சதவீதமானோர் அடிப்படைக் கல்வி கற்றவர்கள் என்பதோடு அரசாங்க பணிகளிலும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சேவைகளிலும் அதிகமாக உள்ளனர்.

இதனால் தற்போதைய இந்திய மத்திய அரசில் வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழி மக்களின் நலன்களை கவனிப்பதற்கான அமைச்சுக்கும் கேரளாவை சேர்ந்த வயலார் ரவி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று இலங்கைக்கும் கேரளாவிற்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் கோபியோ மாநாடு காரணமாக கேரளா சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் அதிக கவனம் ஈர்க்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் வழமைபோல மாநாட்டில் பிரசித்தி பெற்ற கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகள் கண்காட்சி மற்றும் சமூக ஒன்றுகூடல் போன்ற அம்சங்களும் இடம் பெறுகிறது. இம்முறை முதல் தடவையாக கொச்சினில் நடைபெறுகின்ற மாநாட்டின் சிறப்பு நிகழ்வுகளின் தொகுப்பு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்திரா தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி