ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் மாதம் பிறை 25
நந்தன வருடம் மார்கழி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY  ,JANUARY, 08, 2013
வரு. 80 இல. 07
 
மனிதனைத் துரத்தும் கொள்ளிவாய்ப்பிசாசு

மனிதனைத் துரத்தும் கொள்ளிவாய்ப்பிசாசு

‘கொள்ளிவாய் பிசாசு’ என்றொரு பயங்கரமான வார்த்தையை அக்காலத் தில் கிராமப்புறங்களில் நாம் கேள்விப் பட்டதுண்டு. கொள்ளிவாய்ப் பிசாசுகள் இரவில் நெருப்பைப் பற்றி பிடித்தபடி நடமாடுவதாகவும் மனிதர்களைக் கண்டால் துரத்தியபடி வருவதாகவும் அக்காலத்தில் கிராமத்து மக்கள் கூறுவர்.

இரவில் தீச்சுவாலை நடமாடுவதும் உண்மை... மனிதர்களை அது துரத்து வதும். உண்மை... ஆனால் அவை பிசாசுகள் அல்ல!

சடலங்கள் புதைக்கப்பட்ட மயானங் கள் மற்றும் சதுப்பு நிலங்களில் மேதேன் என்ற இயற்கை வாயு உற்பத்தியாவ துண்டு. நிலத்தின் கீழ் உருவான வாயு மேலெழுந்து வந்ததும் தீப்பற்றிக் கொள்வதுண்டு.

அவ்வாயு இரவில் தீப்பற்றும் போது கண்களுக்கு நன்கு தென்படும். இதுவே கொள்ளிவாய்ப் பிசாசு என்று மக்களைப் பயமுறுத்தி யுள்ளது. அதுசரி கொள்ளிவாய்ப் பிசாசு மனிதனை துரத்துவது ஏன்?

தீச்சுவாலையைக் கண்டதும் மனிதன் வேகமாக ஓடத் தொடங்குகிறான். அவ் விடத்தில் கண நேரத்தில் உருவாகும் காற்று வெற்றிடத்தை நோக்கி தீச் சுவாலை நகருவது இயல்பானது தான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி