ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் மாதம் பிறை 25
நந்தன வருடம் மார்கழி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY  ,JANUARY, 08, 2013
வரு. 80 இல. 07
 

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த ஈரானில் மென்பொருள்

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த ஈரானில் மென்பொருள்

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தக்கூடிய நவீன மென்பொருளை ஈரான் வடிவமைத்து வருகிறது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மதத்துக்கு எதிரான கருத்துக்கள், ஆபாச படங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளன.

இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று ஈரான் தெரிவித்திருந்தது. அங்கு இணையத்தளங்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரான் பாதுகாப்பு துறை தலைவர் இஸ்மாயில் அகமது முகாதம் கூறியுள்ளதாவது சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தக்கூடிய நவீன மென்பொருளை வடிவமைத்து வருகிறோம்.

தற்போது இந்த மென்பொருளை சோதனை ரீதியாக பயன்படுத்தி வருகிறோம். நவீன மென்பொருள் மூலம் இணையத்தளங்களை தணிக்கை செய்யும் பணிக்கு விடிவுகாலம் பிறக்கும். ஏனெனில் மென்பொருள் அப்பணியை செய்துவிடும், இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி