ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் மாதம் பிறை 25
நந்தன வருடம் மார்கழி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY  ,JANUARY, 08, 2013
வரு. 80 இல. 07
 

ஒரு நாட்டின் அபிவிருத்திப் பாதையில் உள்@ர் உற்பத்தியாளர்கள் முக்கியமானவர்கள்

ஒரு நாட்டின் அபிவிருத்திப் பாதையில் உள்@ர் உற்பத்தியாளர்கள் முக்கியமானவர்கள்

“ஒரு நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் வேளையில் அல்லது நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்த அந்நாட்டின் உள்ளூர் உற்பத்திகளை மறந்து, உள்ளூர் கைத்தொழிற் பொருட்களை மறந்து சிறு மற்றும் மத்திய தர கைத்தொழிற்றுறையை மறந்து கிராமிய மற்றும் மனைப் பொருளாதாரத் துறைகள் உள்ளிட்ட கைத்தொழில்களை மறந்து செயலாற்ற முடியாது.

என்று முதலீட்டு ஊக்குவிப்பு, பிரதி நிதியமைச்சரும் சிரேஷ்ட அமைச்சருமான சரத் அமுனுகம கலகெதர ஹதரலியத்தையில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்திகள் சம்பந்தமான கூட்டு விழாக்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

இந்த அரசின் முன்னணி நோக்கமாகவும் முயற்சியாகவும் இருப்பது கைத்தொழிற்றுறைகளை மேம்படுத்தி மக்களின் பொருளாதார வளங்களை வலுவூட்டுவதாகும். உள்ளூரில் உற்பத்தி செய்யக் கூடிய சகல ஆக்கங்களை யும் மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும்.

எமது முன்னைய வாழ்க்கை முறையை எட்டிப் பார்க்கும் போது குடும்பத்தில் மூத்த பிள்ளை பாவித்த உடைகள் மற்றும் புத்தகங்களை அடுத்த இளைய சகோதர பிள்ளைகள் பாவிப்பார்கள். ஆனால் இன்று அவ்வாறில்லை நாளுக்கு நாள் வாழ்க்கை நடைமுறைகள் மாறிக் கொண்டு வருகின்றன அன்று காட்டில் பறித்து வந்த கீரை வகைகள் இன்று கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் கூறினார். இந்நிகழ்வின் போது கலகெதர ஸ்ரீல.சு.கட்சிக் கிளை அமைப்பினர் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி