ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் மாதம் பிறை 25
நந்தன வருடம் மார்கழி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY  ,JANUARY, 08, 2013
வரு. 80 இல. 07

திவிநெகும சட்டமூலம்

2/3 பெரும்பான்மையால் இன்று நிறைவேறும்

* 50 இலட்சம் மக்களுக்கு நன்மை
* வறுமை ஒழிப்பில் மற்றொரு மைல்கல்

வறுமையை ஒழிக்கும் அரசின் தேசிய வேலைத் திட்டத் துக்கு உரம் சேர்க்கும் திவிநெகும அபிவிருத்தி திணைக்கள சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படவுள்ளது.50 இலட்சம் மக்களுக்கு நன்மை யளிக்கக்கூடிய திவிநெகும சட்டமூலத் திற்கு எதிராக எவராயினும் செயற் படுவார்களாயின் அவர்கள் வறிய வர்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது என் றும் அரசு தெரிவிக்கிறது.

விவரம் »

நமது நாட்டில் கைத்தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச சந்தையில் போட்டியிடக்கூடிய விலைக்கு மின்சாரத்தை வழங்குவதற்கும், வீட்டு மற்றும் ஏனைய மின்சாரப் பாவனையாளர்களுக்கு உகந்த விலைக்கு மின்சாரத்தை வழங்குவதற்கும் ஏற்புடைய வகையில் மின்சார வழங்கலை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அரசியலமைப்பை நிராகரித்து உச்ச நீதிமன்றம் செயற்பட முடியாது

அரசியலமைப்பே உயர்வானது -
ஜோன் செனவிரத்ன

நீதிமன்ற கட்டமைப்பை புதைகுழியில்  தள்ளக்கூடாது -
டளஸ் அழகப் பெரும

பாராளுமன்ற அதிகாரத்தை குறைக்கும் வகையில் ஜே.வி.பி. -
மைத்திரிபால சிறிசேன

உச்ச நீதிமன்றத்தினால் அரசியலமைப்பை நிராகரிக்க முடியாது. உச்சநீதிமன்ற வியாக்கியானத்தின்போது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டிருந்தால் அது பாரதூரமான தவறாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் . . . .

விவரம் »

குற்றப் பிரேரணை மீதான விவாதம் 10, 11ம் திகதிகளில்

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு ஐ.தே.க. விவாதத்தை எதிர்க்கவில்லை; திகதியையே எதிர்த்தனர்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதி ரான குற்றப் பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் நடத்துவதென கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை மீதான விவாதம் நடைபெ றும் இரண்டாம் நாள் 11 ஆம் திகதி மாலை 6.30 க்கு வாக்கெடுப்புகள் நட த்தப்படும்.

விவரம் »

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் பொலிஸ் காதலனால் வெட்டி கொலை

காக்கிச்சட்டைக்குள் காதல் தகராறு

கொழும்பு பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் அவரது பொலிஸ் காதலனால் நேற்று கழுத்துவெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.காதலியை கொலை செய்த காதலன் தானும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சுயநினைவு அற்ற நிலையில் மீட்கப்பட்ட காதலனை கொழும்பு தேசிய வைத்திய சாலையின் விபத்துப் பிரிவில் அனுமதித்தனர். இச்சம்பவம் நேற்றுக் காலை 7.15 மணியளவில் கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியில் அமைந்துள்ள மேம்பால த்தில் வைத்து இடம்பெ ற்றுள்ளது.

விவரம் »

 

மறைந்த களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான ஹஸித்த மடவளையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை இறுதி அஞ்சலி செலுத்தினார். களனி வராபொட இல்லத்துக்கு சென்ற ஜனாதிபதி குடும்ப உறவினர்களுக்கு தமது ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக் கொண்டார். பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவும்
ஜனாதிபதியுடன் சென்றிருந்தார்.