ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் மாதம் பிறை 25
நந்தன வருடம் மார்கழி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY  ,JANUARY, 08, 2013
வரு. 80 இல. 07

பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு புரிபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு புரிபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

உலகில் பெண்ணினத்தின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக் கையை விட சற்றுக்கூடுதலாக இருக்கின்ற போதிலும் பெண் கள், ஆண்களைப் பொறுத்தமட்டில் இன்றைய நவீன உலகில் கூட ஓரளவுக்கு இரண்டாந்தர நிலையில் இருந்து அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக சிந்திக்கும் எவரும் மறுக்கப்போவதில்லை.

அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, ஸ்பைன், போத்துக்கல் போன்ற மேற்குலக நாடுகளில் வாழும் பெண்கள் சம அந்தஸ்துடன் ஆண் களைவிடக் கூடுதலான சம்பளத்தை வாங்கி சுதந்திரமாக இருக் கின்றார்கள் என்ற கூற்று ஒரு மாயையாகும். அந்நாடுகளில் பெண் கள் இவ்விதம் ஆண்களைவிட செல்வாக்குடன் வாழ எத்தனிக்கும் போது அவர்களின் குடும்ப வாழ்க்கை சீர்குலைந்து போகின்றது. இதனால்தான் அந்நாடுகளில் விவாகரத்துக்கள் மறுமனம் செய்தல் போன்ற நிகழ்வுகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற கீழைத்தேய நாடுகளைவிட நூற்றுக்கணக்கில் அதிகமாக இருந்து வருகின்றன.

மேற்கு நாடுகளில் இவ்விதம் குடும்ப வாழ்க்கை சிதைந்து போனா லும் அங்குள்ள பெண்களுக்கு அந்நாட்டுச் சட்டங்கள் பெருமள வில் பாதுகாப்பை அளிக்கின்றன. அந்நாடுகளில் பெண்கள் நள்ளி ரவிலும் நடந்தோ அல்லது வாகனங்களை ஓட்டியோ தன்னந்தனி யாக வெகுதூரத்துக்கு சென்று திரும்புவதற்கு பொலிஸார் பூரண பாதுகாப்பை அளிக்கின்றார்கள். அதனால்தான் மேற்கு நாடுகளில் கீழைத்தேய நாடுகளில் இருந்து வருவது போன்று பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் இடம்பெறுவது மிக மிகக் குறைவாக இருக்கின்றது.

இந்திய மத்திய அரசாங்கத்தையே நிலை தடுமாற வைக்கும் அளவு க்கு சமீபத்தில் புதுடில்லியில் ஓர் இளம் வைத்திய மாணவி பொதுப் போக்குவரத்து சேவையில் வைத்து வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் அவள் சென்று கொண்டிருந்த பஸ்சில் இருந்து தூக்கி எறியப்பட்டு மரணத்தைத் தழுவிய சம்பவம் விஸ்வரூபம் எடுத் ததை நாம் அனைவரும் ஊடக செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருப்போம்.

இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவிலுள்ள பல நகரங்களில் நாளாந் தம் இடம்பெற்று வருகின்றன. ஆண் ஆதிக்கமே இவ்விதம் பெண்களை அடிமைகளாகக் கருதி அவர்கள் மீது பாலியல் வன் முறைகளை மேற்கொள்வதற்கு பிரதான காரணமாகும்.

இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் ஏனைய கீழைத்தேய நாடுகளி லும் நாம் பெண்களை தாய்க்குலம் என்று கருதி அவர்களை கெளரவித்து வருகின்ற போதிலும் எங்களின் சில சுயநலவாத உடன்பிறப்புக்கள் பெண்களை அவ்விதம் மதிக்கத் தவறுகின்றனர். அவர்கள் பெண் இனத்தை ஒரு விளையாட்டு பொம்மையாக வைத்து சட்டத்துக்கும், நீதிக்கும் மதிப்பளிக்காமல் தங்கள் பாலி யல் இச்சையை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரசாங்கம் உட்பட இந்திய அரசாங்கமும் இந்த விடயத் தில் இப்போது தீவிர நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. பெண்களின் மீது பாலியல் வல்லுறவை பலாத்காரமாக மேற்கொள் பவர்களுக்கு கொலைக் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் அதி உச்ச தண்டனையான தூக்குத்தண்டனையை வழங்க வேண்டும் என்று இப்போது இந்திய, இலங்கை அரசாங்கங்கள் தங்கள் அவ தானத்தை திருப்பியுள்ளன.

இலங்கையில் கூட சமீபத்தில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஒரு வயல் நிலத்தில் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கடுமையாக உழைத்துவந்த 35க்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று பெண் கள் மது போதையில் இருந்த 4 காமுகர்களால் பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்த முயச்சித்ததாகவும் அடித்துக் காயப்படுத்தியுள்ள தாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை துன் புறுத்தியவர்களை இனங்கண்டு தக்க நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் செயற்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுவது உண்மை யிலேயே மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

ஆண்களைவிட பெண்கள் உடல் ரீதியில் பலவீனமானவர்கள் என்ற ஒரே காரணத்தை வைத்தே இவ்விதம் ஆண் ஆதிக்கத்தின் மீது நம்பிக்கை உடைய சில காமுகர்கள் பெண்களை இத்தகைய துன் பங்களை அனுபவிக்கச் செய்கின்றார்கள்.

நானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவன். எனக்கும் சகோதரி கள், மருமக்கள், மைத்துனிமார் இருக்கிறார்கள் என்பதை இத்த கைய சுயநலவாதிகளான காமுகர்கள் மனதில் வைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் இத்தகைய கொடிய கொடுமைகளை அப்பா விப் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கமாட்டார்கள்.

பிள்ளைகள் வளரும் குடும்ப சுற்றாடலே அவர்கள் பெரியவர்களான பின்னர் இவ்விதம் கொடுமைக்காரர்களாக மாற்றுவதற்கு அடித்த ளத்தை அமைத்துக் கொடுக்கின்றது. சில பெற்றோர் குடும்பத்துக் குள் ஒழுக்க சீலர்களாக இருப்பதற்குப் பதில் மாற்றான் மனைவி யுடன் உறவாடுதல் இன்னும் ஒரு ஆணுடன் ஒரு பெண் உறவு வைப்பது போன்ற கேவலமான நிகழ்வுகள் தங்கள் சிறுபிள்ளை களுக்கு முன்னால் மேடையேற்றப்படும் போது அத்தகைய கொடுமைகள் அந்தப் பிள்ளைகளின் மனதில் நிரந்தரமாக குடி கொள்கின்றது.

இந்த சிறு பிராய அனுபவங்களும் ஒழுக்கமற்ற சில பெற்றோரிடம் இருந்து தாங்கள் கற்றுக்கொண்ட தீய பழக்கங்களுமே பெரியவர் களான பின்னர் இந்தப் பிள்ளைகளை பெண்களை மதிக்காத அவர்கள் மீது அன்பும் பாசமும் கொள்ளாத காமுகர்களாக மாற்று கின்றது என்று மனநல வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.

எதிர்காலத்திலும் பெண்கள் மீதான இத்தகைய பாலியல் வல்லுறவு களை தடுக்க வேண்டுமாயின் முதலில் அந்த நற்குணத்தை பெற் றோர் குடும்ப மட்டத்தில் இருந்து தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது அவசியமாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி