ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் மாதம் பிறை 25
நந்தன வருடம் மார்கழி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY  ,JANUARY, 08, 2013
வரு. 80 இல. 07
 

குழப்ப நினைத்தால் அழகிரி மீது கடும் நவடிக்கைகுழப்ப நினைத்தால் அழகிரி மீது கடும் நவடிக்கை

ஸ்டாலின் தான் தி.மு.க.வின் அடுத்த தலைவர்!

குழப்ப நினைத்தால் அழகிரி மீது கடும் நவடிக்கை

கருணாநிதி எச்சரிக்கை

கட்சியின் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, சமுதாய மேன்மைக்காக என் ஆயுள் இருக்கும் வரை பாடுபடுவேன். எனக்குப் பின் யார் என்ற கேள்விக்கு பதில் ஸ்டாலின்தான்.

அவரை மறந்துவிடாதீர்கள் என்று கூறியிருந்தார். இதையடுத்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய தி.மு.க தென்மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி, தி.மு.க. ஒன்றும் மடம் அல்ல இதை நான் மட்டும் சொல்லவில்லை, கருணாநிதி, ஸ்டாலின் இருவருமே இதை பலமுறை கூறியுள்ளனர் என்றார். இதன் மூலம் ஸ்டாலினை தலைவராக்குவதை ஏற்க முடியாது என்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.

இந் நிலையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மு.க. ஸ்டாலின் பெயரை தி.மு.க. தலைவர் பதவிக்கு முன்மொழிவேன் என்று அறிவித்தார். முன்னதாக நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், அழகிரியின் ஆதரவாளருமான மூர்த்தி பேசுகையில், அண்ணன் அழகிரியும், தளபதி ஸ்டாலினும் இணைந்து செயலாற்றினால், நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற முடியும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட கருணாநிதி, அவரிடம் மிகக் கோபமாகப் பேசினார். கருணாநிதி கூறுகையில், கட்சித் தலைமை ஒரு கருத்துச் சொன்னால், உங்கள் அண்ணன் எதிர்த்துப் பேட்டி கொடுப்பாரா? மதுரையில் கட்சியை எப்படி வளர்க்கிaர்கள் என்று எனக்குத் தெரியாதா? இந்த நிலை நீடித்தால் நடவடிக்கை எடுப்பேன். கட்சியின் முடிவுக்கு எதிராகப் பேசும் மாவட்டச் செயலாளர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார். இதனை யடுத்து அழகிரிக்கு ஆதரவாக பேசிய மூர்த்தி அடங்கிவிட்டார் என இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, தி. மு. க.வின் அடுத்த தலைவர் மு. க. ஸ்டாலின்தான் என்று கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்தார். பொதுக் குழுவில் வாய்ப்பு கிடைத்தால் தலைவர் பதவிக்கு ஸ்டாலினை நானே முன்மொழிவேன் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, சமுதாய மேன்மைக்காக என் ஆயுள் இருக்கும் வரை பாடுபடுவேன். எனக்குப் பின் யார் என்ற கேள்விக்கு பதில் ஸ்டாலின்தான். அவரை மறந்துவிடாதீர்கள் என்று கூறியிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த தி. மு. க. வின் தென்மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு. க. அழகிரியிடம், எனக்குப் பின் ஸ்டாலின்தான் என்று கருணாநிதி கூறியது பற்றி கேட்டனர். அதற்கு அழகிரி, தி. மு. க. ஒன்றும் மடம் அல்ல; இதை நான் மட்டும் சொல்லவில்லை. கருணாநிதி, ஸ்டாலின் இருவருமே இதை பலமுறை கூறியுள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நிதி திரட்டுவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், உங்களுக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்று நீங்கள் கூறியதற்கு தி. மு. க. ஒன்றும் மடம் அல்ல என்று அழகிரி கூறியுள்ளாரே என்று கேட்டார்.

அதற்கு கருணாநிதி சமுதாயப் பணியைத்தான் எனக்குப் பிறகு ஸ்டாலின் ஆற்றுவார் என்று கூறினேன். அதனை சில ஏடுகள் விஷமத்தனமாக அடுத்த தலைவர் ஸ்டாலின் என்று நான் கூறியதாகத் தவறாக வெளியிட்டுள்ளன என்று பதிலளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், தி. மு. க. முதன்மையான அரசியல் இயக்கம். அந்த இயக்கத்தில் உங்களுக்குப் பிறகு ஸ்டாலின் என்று சொன்னால் அது தலைவர் என்றுதானே அர்த்தம் என்று கேட்டார்.

அதன் பின் கருணாநிதி மனம் திறந்து ஸ்டாலினை முன்மொழிந்து பேசத் தொடங்கினார். தி. மு. க. ஒரு ஜனநாயக இயக்கம், தலைவர், பொதுச் செயலாளர் பதவிக்கு ஒருவர் நிற்க வேண்டும் என்றால், அதை பொதுக் குழுவில் உள்ள பெரும்பான்மையோர் முன்மொழிய வேண்டும். அப்படி முன்மொழியக்கூடிய வாய்ப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு வரும் என்றால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்டாலினைத்தான் தலைவராக முன்மொழிவேன். இது ஏற்கனவே க. அன்பழகன் முன்மொழிந்தது. அதை நான் வழிமொழிகிறேன் என்றுதான் அர்த்தம். அதேசமயம் வரக்கூடிய பொதுக் குழுவில் ஸ்டாலினை முன்மொழிய முடியாது.

தி. மு. க. வின் கிளைக்கழகத் தேர்தல் வட்டத் தேர்தல், மாவட்டத் தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு நடைபெறக்கூடிய பொதுக் குழுவில்தான் முன்மொழிய முடியும். தி. மு. க. வின் சட்ட திட்ட தடையின் காரண மாகவே ஸ்டாலினைத் தலைவராக அறிவிக்க முடியாது. உள் கட்சித்தேர்தல் முடியும் வரை நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாததால் நான் போட்டியிடுவது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. தலைவர் பதவிக்கு அழகிரி போட்டியிட விரும்பினால் போட்டியிடலாம்.

தி. மு. க. சர்வாதிகார கட்சி இல்லை. ஸ்டாலினை நான் முன்மொழிந் தால், ஒரு கிளைக் கழகத்தில் இருக்கும் ஓர் உறுப்பினர் கூட ஸ்டாலினை எதிர்த்து நிற்க உரிமை உண்டு என்றார் கருணாநிதி. மக்களவைத் தேர்தலில் தி. மு. க.வும் தே. மு. தி. கவும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, தே. மு. தி. கவில் தி. மு. க. என்பதும் இருக்கிறது. 2013 இல் மக்களவைத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பில்லை’ என்றும் கருணாநிதி கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி