.

2010-11-19

  ~பெருந்தோட்டத் துறையின்

"பெருந்தோட்டத் துறையின் சுபீட்சத்துக்காக உழைக்கும் தலைவர்"

- முத்து சிவலிங்கம்

 

புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை மூலம் பல செயற்திட்டங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக இலங்கையினதும், குறிப்பாக, பெருந்தோட்டத் துறையினதும், சுபீட்சத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.

மஹிந்த சிந்தனை மூலம் பெருந்தோட்டத் துறையின் முன்னேற்றத்திற்கும் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கும் பெரும் பணியாற்றியுள்ளார். மக்களின் தேவை கருதி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு இரவு பகல் பார்க்காமலும் தன்னிச்சையாக செயற்படாமலும் நாட்டு மக்களினதும் தனது அமைச்சரவை உறுப்பினர்களினதும் ஆலோசனைகளை கேட்டு அதன் மூலம் சேவைகளை செய்தார்.

கிராமங்களை நகரமாக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் செயற்படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் “ஜாதிக சவிய” (தேசத்தை வலுவூட்டும்) திட்டம், மற்றும் “கமின் கமட்ட” (கிராமத்தில் இருந்து கிராமத்துக்கான திட்டம்) போன்றவை மூலம் மலையகத்தில் பல இடங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் கட்டியெழுப்பட்டுள்ளன.

மிகவும் நலிந்த நிலையில் உள்ள மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன் அவர்களின் அபிவிருத்தி உட்கட்டமைப்பு வேலைகளையும் செய்வதற்கான வழிசமைத்து வலுவான நிலைக்கு கொண்டு சென்ற ஜனாதிபதிக்கு முதலில் எனது நன்றியை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் அத்துடன் மலையகத்தை நாட்டின் ஏனைய பகுதிகைள போல் அபிவிருத்தி செய்யமில்லியன் கணக்கான செலவில் பாதைகள், நீர், சுகாதாரம், கல்வி, வீட்டுத் திட்டம், ஆகியவற்றை எமது மலையகத்திற்கும் இக்குறுகிய காலத்தில் வழங்கி வளமான மலையகத்தை உருவாக்கிய எமது நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மலையக மக்கள் சார்பாகவும் இ.தொ.கா. சார்பாகவும் எமது மனமார்ந்த வாழ்த்தையும் நன்றியையும் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம்.

ஜனாதிபதியின் முதலாவது ஆட்சியில் மலையக மக்களுக்கு எண்ணிப்பார்க்க முடியாத அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்றன. அதுபோன்று தொடர்ந்து வரும் அவரின் ஆட்சியிலும் மலையகம் முன்னேறும் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் இந்நாட்டை பல ஆண்டுகள் ஆட்சி செய்வதன் மூலமே நாடு வளமாகவும், சுபீட்சமாகவும், நிம்மதி நிறைந்த ஒரு சமாதான நாடாகவும் திகழும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது ஆட்சி காலத்தில் மலையகம் அடைந்த அபிவிருத்திகள் இவை.

நுவரெலியா

நுவரெலியா, பதுளை பெருந்தெருக்கள் அபிவிருத்திக்கு ரூபா 5,500 மில்லியன், ஏனைய தெருக்கள் ரூபா 132.2 மில்லியனும் ஏலவே 70 தோட்ட வைத்தியசாலைகள் அரசால் பொறுப்பேற்கப்பட்டு சுகாதார அபிவிருத்தி மேம்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளில் மலையக சுகாதார துறைக்கு ரூபா 225 மில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 4 வருடங்களில் அரசு ரூபா 7.5 மில்லியன் ரூபாவை விவசாயம் மற்றும் நீர் வழங்கல் புனரமைப்புக்காக வழங்கியுள்ளது.

மலையக தொழிலாளர்களுக்கான 50,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி புதிய ஆசிரியர் நியமனங்கள் 3000 படித்த மலையக இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மலையக தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படித்த மலையக இளைஞர்களுக்கான கிராம உத்தியோகத்தர், தபால் உத்தியோகத்தர் பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர் போன்ற பதவிகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முதன்முறையாக 165 தோட்ட இளைஞர்களுக்கு மட்டக்களப்பு தாதியர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட பாற்பண்ணை வளர்ச்சிக்கும், பாற்பண்ணை தொழிலாளர்களின் வருமான வளர்ச்சிக்கும், பாற்பண்ணை உற்பத்திகளுக்கும் 2005ம் ஆண்டளவில் ரூபா 3 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் நிதியுதவி மில்லியன் US டொலர் 384 செலவில் கொத்மலை நீர் மின் உற்பத்தி செயற்திட்டம் (Uper kotmale hydro project scheme) ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 3ம் கட்ட செயற்திட்டம் 2011ல் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2007, 2008 ஆண்டுகளில் மாவட்ட அபிவிருத்திக்காக மாகாண சபையால் ரூபா 958.5 மில்லியனும் பிரதேச சபையால் 210.4 மில்லியனும் உள்ளூராட்சி மன்றத்தால் ரூபா 358 மில்லியனும் சட்டரீதியான மதிப்பீட்டு சபையால் (Statutory Board) 227 மில்லியனும் ஒதுக்கப்பட்டன. மேலும் விசேட செயற்திட்டங்களுக்காக ரூபா 168.3 மில்லியனும் வீடமைப்பு அதிகாரச் சபையால் ரூபா 7.8 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.

134 செயற்திட்டத்திற்காக வீதி அதிகார சபையால், ரூபா 134 மில்லியன், பிரதேச சபை செயற்திட்டத்திற்காக ரூபா 423.7 மில்லியன், நீர் வழங்கலுக்கு ரூபா 398.94 மில்லியன், நகர சபை நீர் வழங்கலுக்கு ரூபா 2,933.15 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கம் அமைக்க ரூபா 5,000 மில்லியனும் சமுர்த்தி திட்டங்களுக்காக ரூபா 113 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பசுமைப்படுத்தும் “திரிய பியச” அழகியற் சார்ந்த திட்டங்களுக்காக (Beautification Project) ரூபா 525 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய மாவட்ட செயலக கட்டடத்திற்கு ரூபா 406.23 மில்லியனும், மேலும் கிராமிய பாதை, நீர்வசதி, விவசாயம், கல்வி, நீர்வழங்கல், சுகாதாரம், மின்சாரம், சமூகவிருத்தி ஆகியவற்றிற்கு ரூபா 956 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2009 ல் ரூபா 386 “கமநெகும” திட்டத்தின் முதல் படியாக ரூபா 192.8 மில்லியனும் இரண்டாம் படியாக ரூபா 95.8 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

104 மின்சார திட்டத்திற்கு ரூபா 76.4 மில்லியனும், மேலும் ஏனைய விசேட மின்சார இணைப்பிற்கு ரூபா 0.348 மில்லியனும், “ரணவிரு” வீடமைப்புக் கடன் திட்டத்திற்காக ரூபா 48.1 மில்லியனும் 14 தோட்ட வீதி அபிவிருத்திற்கு ரூபா 69.4 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதுளை

பதுளை, மொனராகலை மாவட்டத்தில் நீர் வழங்கல் திட்டத்திற்காக ரூபா 853 மில்லியன் இதன் மூலம் 47,000 பொது மக்ககள் நன்மையடைவர்.

ஊவா வெல்லஸ பல்கலைக்கழகம் அபிவிருத்திக்கும் நிர்மாணத்திற்கும் ரூபா 20,000 மில்லியன், ஐ.தே.க.வால் நிராகரிக்கப்பட்ட இப்பல்கலைக்கழக நிர்மாணத்திற்கு ஜனாதிபதி அனுமதி அளித்து நிதியும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி

கடந்த 4 வருடங்களாக பெருமளவில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2009ல் கமநெகும திட்டத்தின் கீழ் ரூபா 218 மில்லியன் செலவில் ரூபா 436 செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் பொருளாதார தரத்தை மேற்படுத்த ரூபா 26.1 மில்லியன் செலவில் ரூபா 289 செயற்திட்டங்கள் இவற்றில் வீதி, நீர்வழங்கல், கல்வி, சுகாதாரம், மின்சாரம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் என்பவை உள்ளடக்கப்படுகின்றன.

2009 ல் “ரணவிரு” வீடமைப்பு திட்டத்தில் ரூபா 25.5 மில்லியன் செலவில் 187 வீடமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரச வரவு செலவுத் திட்டத்தில் 650 செயற்திட்டத்திற்காக ரூபா 52.55 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக இரத்தினபுரி அபிவிருத்திக்கு ரூபா 510.55 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மத்திய, சப்ரகமுவ - 2009 மாவட்ட பாதைகள்

* ரூபா 9,652 மில்லியன் செலவில் மத்திய, சப்ரகமுவ மாகாணத்தில் பாதை மாகாண பாதை 322 கிலோமீற்றர் தூரம்.

* இரத்தினபுரியில் கெமிதிரிய செயற்திட்டங்கள்

* 26 கெமிதிரிய நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் தமக்குரிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்து வருகின்றன.

கண்டி

கொழும்பு- கண்டி அதிவேக பாதை - 4 ஆண்டு திட்டம் உலக வங்கியின் அனுசரணையின் பாரிய செயற்திட்டம் ரூபா 98.9 கிலோ மீற்றர் தூரம் இரண்டு படிமுறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.

* ரூபா 300 மில்லியன் செலவில் 311 கிராமிய பாதைகள்

மேலும், இதேபோன்ற வேலைத்திட்டங்கள் செயற்திட்டங்கள் இனிவரும், காலங்களில் தொடர மலையக மக்களின் சார்பிலும், இ.தொ.கா.வின் சார்பிலும் ஜனாதிபதியின் பயணம் தொடரவும் இரண்டாவது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.