.

2010-11-19

  பாடசாலை சீருடை துணிகளை வருட முடிவுக்குள் விநியோகிக்கத் தீர்மானம்

பாடசாலை சீருடை துணிகளை வருட முடிவுக்குள் விநியோகிக்கத் தீர்மானம்

இவ்வருடம் டிசம்பர் மாதத்துக்குள்ளாகவே பாடசாலைச் சீருடை துணிகளை நாடளாவிய ரீதியில் வட- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களுக்கும் விநியோகிக்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள 94 கல்வி வலயங்களின் ஊடாக வலய கல்விப்பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் பாடசாலை சீருடைகளை டிசம்பர் மாதத்துக்கு முன்பதாகவே விநியோகிக்க நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள 9,200 பாடசாலைகளின் 40 இலட்சம் மாணவர்களுக்கே இந்த சீருடை துணிகள் விநியோகிக்க ப்படவிருக்கின்றன. (ரு- ஞ)


சுதுமலை பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்துக்கு தெரிவான மாணவி

பெளதீக வளம் உட்பட எதுவித வசதிகளுமில்லாத பின்தங்கிய நிலையில் உள்ள சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஒருவர் ஆங்கில தினப் போட்டியில் தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யோகநாதன் சிந்தியா என்னும் மாணவியே உறுப்பெழுத்துப் போட்டியில் தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவராவார்.

இதேவேளை 11 வருடங்களுக்குப் பின்பு இதே பாடசாலையைச் சேர்ந்த பிரபாகரன் சசிவதனன் என்னும் மாணவன் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 155 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (ரு-ஞ)