வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

எதியோப்பிய விமானம் கடலில் விழுந்து 90 பேர் பலி

எதியோப்பிய விமானம் கடலில் விழுந்து 90 பேர் பலி

எதியோப்பிய விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 90 பேர் உயிரிழ ந்தனர். இந்த விபத்து கடந்த திங்க ட்கிழமை அதிகாலை நிகழ்ந்துள்ளது.

மிக மோசமான வானிலையே இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

லெபனான் விமான நிலையத்தி லிருந்து புறப்பட்ட சிறிது நேரத் திலேயே இந்த விபத்து நிகழ்ந்து ள்ளது.

விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் கடலில் விமா னம் விழுந்தது. நடுவானில் தீப் பிழம்பு வெடித்துச் சிதறியதைப் பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து புறப் பட்ட சில நிமிஷங்களிலேயே தொட ர்பு துண்டிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடற்கரையிலிருந்து 3.5 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் விமானம் விழுந்தாக போக்குவரத்து அமைச்சர் காஸி அரிதி தெரிவித்தார்.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 54 பேர் லெப னானைச் சேர்ந்தவர்கள்.

22 பேர் எதியோப்பியாவைச் சேர்ந்தவர்கள். ஒரு இராக்கியரும் ஒரு பிரான்ஸ் பெண்மணியும் சிரியாவைச் சேர்ந்த ஒருவரும், 7 விமான ஊழியர்களும் உயிரிழந்தவர் களில் அடங்குவர். இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்தவர்களும் இதில் அடங்குவர்.

ஒருவர் கனடா லெபனானன் குடியுரிமையும், ஒருவர் ரஷியா - லெபனானன் குடியுரிமையும் பெற்றி ரு ந்தனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு விமான நிலையத்தி லிருந்து புறப்பட்ட 5 நிமிஷங்களில் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள தாகவும், மீட்புப் பணிக்கு அண்டை நாடுகளின் உதவி கோரப்பட்டு ள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விபத்தில் எவரேனும் உயிர் பிழைத்துள்ளனரா என்பது சரிவர தெரியவில்லை.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •