வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

மியான்மார் தலைவர் சூ கீ நவம்பர் மாதம் விடுதலை செய்யப்படுவார்

மியான்மார் தலைவர் சூ கீ நவம்பர் மாதம் விடுதலை செய்யப்படுவார்

மியான்மார் நாட்டில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஜனநாயக ஆட்சி கோரி பல ஆண்டுகளாக சூ கீ என்ற பெண் தலைவர் போராடி வருகிறார்.

இதனால் அவரை அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக்காவலில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகளாக அவர் வீட்டுக்காவலில் இருந்து வருகிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி உள்ளன. ஆனால் அதற்கு அந்த நாடு சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் அவர் வருகிற நவம்பர் மாதம் விடுதலை செய்யப்படுவார் என்று அந்த நாட்டு உள்துறை மந்திரி மேஜர் ஜெனரல் மாங் தோ அறிவித்தார். உள்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த 21ந் திகதி நடந்தது. இந்த கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை ஒக்டோபர் மாதம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. அதற்கு அடுத்த மாதம் அவர் விடுதலை செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •