வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

ஜி-20 நிதி அமைச்சர்கள் மாநாட்டை நடாத்த ஜெர்மனி ஆர்வம்

ஜி-20 நிதி அமைச்சர்கள் மாநாட்டை நடாத்த ஜெர்மனி ஆர்வம்

இந்த ஆண்டு ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டை நடத்த ஜெர்மனி ஆர்வம் தெரிவித்து ள்ளது.

கனடாவில் ஜி-20 நாடுகளின் மாநாடு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

அதற்கு முன்பாக நிதி அமைச் சர்களின் மாநாட்டை நடத்த உள்ள தாக ஜெர்மனியின் நிதி அமைச்சர் உல்ஃப்காங் ஷேப்லே தெரிவித்தார்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையைத் தொடர்ந்து உலக வங்கி உள்ளிட்ட நிதி அமைப்புகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசி யம் என்பது உணரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மாநா ட்டில் இந்தியா இக்கருத்தை வலி யுறுத்தியது.

தற்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இதை அறி வுறுத்தியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் ஏற்பட்ட பாதிப்புகளை பகிர்ந்து கொள்வது மற்றும் எதிர் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்கு உரிய நிதியத்தை ஏற்படுத்துவது உள் ளிட்டவை குறித்து நிதி அமைச் சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக உல்ஃப்காங் தெரிவித் தார்.

ஆபத்தான முதலீடுகளைத் தவிர் க்குமாறு வங்கிகளுக்கு பராக் ஒபாமா அறிவுறுத்தியுள்ளது வரவே ற்கத்தக்க முடிவு என்று அவர் பாரா ட்டினார்.

சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள் ளக் கூடிய வகையில் நிதி சீரமை ப்புக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஜெர்மனி விரும்புகிறது.

அதற்கேற்ப நிதி அமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானங்களை எட்ட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •