வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

கெமிக்கல் அலியை தூக்கிலிட்டதன் எதிரொலி:  3 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்

கெமிக்கல் அலியை தூக்கிலிட்டதன் எதிரொலி:  3 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் உறவினர் அலி மஜீத் என்கிற கெமிக்கல் அலி. ஈராக் அரசின் உயர் அதிகாரியாக இருந்த இவர் சதாம் உசேனுக்கு எதிராக இருந்தவர்களை கொன்று குவித்தார்.

சதாம் உசேனை எதிர்த்து வந்த குர்தீஷ் இன மக்கள் 5 ஆயிரம் பேரை விஷ வாயு செலுத்தி கொன்றனர். இதனால் அவர் கெமிக்கல் அலி என்று அழைக்கப்பட்டார். அமெரிக்கா ஈராக்குக்குள் புகுந்து சதாம் உசேன் ஆட்சியை தூக்கி எறிந்தது. அப்போது சதாம் உசேன் உள்ளிட்ட பலர் கைதானார்கள்.

கெமிக்கல் அலியும் கைது செய்யப்பட்டார். சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கெமிக்கல் அலி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில் 3 வழக்குகளில் ஏற்கனவே அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டு இருந்தது. குர்தீஷ் மக்களை கொன்றதாக தொடரப்பட்டிருந்த 4வது வழக்கிலும் கடந்த வாரம் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற ப்பட்டது. சிவப்பு உடை அணிவித்து முகத்தில் கறுப்பு துணியை கட்டி தூக்கு மேடைக்கு அழைத்து வந்தனர். பின்னர் தூக்கில் தொங்கவிட்டு மரண தண்டனை நிறைவேற்றினார்கள். அவருடைய உடலை ரகசிய இடத்தில் வைத்துள்ளனர். எங்கு அடக்கம் செய்யப்படும் என்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

கெமிக்கல் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் வெளியானதும் ஈராக்கில் 3 இடங்களில் ஒரே நேரத்தில் மனித குண்டு தாக்குதல்கள் நடந்தன. பாக்தாத்தில் உள்ள 3 பெரிய ஹோட்டல்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தது. முதல் குண்டு அங்குள்ள டைக்கில் ஆற்றங்கரை ஓரம் உள்ள ஷொட்டல் ஹோட்டலில் வெடித்தது. மனித குண்டு தீவிரவாதி ஒருவர் ஹோட்டலுக்குள் புகுந்து வெடிக்கச் செய்தார். இதில் 14 பேர் உயிர் இழந்தனர். அடுத்த 5 நிமிடத்தில் பாபிலோப் என்ற ஹோட்டலில் குண்டு வெடித்தது. இதில் 7 பேர் உயிர் இழந்தனர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •