வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

பங்களாதே'{டனான 2ஆவது டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில்

பங்களாதே'{டனான 2ஆவது டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில்

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மிர்பூரில் நடைபெற்று வரும் 2ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களை எடுத்திருந்தது.

தமிம் இக்பால் 151 ஓட்டங்களையும் ஜுனைட் சித்தீக் 51 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்து வீச்சில் சஹீர்கான் 63 ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுகளை எடுத்திருந்தார்.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 233 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 459 ஓட்டங்கள் குவித்து இருந்தது. டெண்டுல்கர் 143 ஓட்டமும், டிராவிட் 111 ஓட்டங்களும் (காயத்தால் விலகல்) எடுத்தனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) 3 ஆவது நாள் ஆட்டம் நடந்தது. கேப்டன் டோனியுடன், யுவராஜ் சிங் இணைந்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

யுவராஜ் சிங்குக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்டில் அவர் ஆடவில்லை. டோனியுடன், சஹிர்கான் களம் வந்தார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சஹீர்கான் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

அப்போது ஸ்கோர் 467 ஆக இருந்தது. 7 வது விக்கெட்டுக்கு டோனியுடன், இஷாந்த் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 115.4 ஓவர்களில் 500 ஓட்டங்களை குவித்தது. டோனி மிகவும் சிறப்பாக விளையாடி 50 ஓட்டங்களை தொட்டார். அவரது 17 வது அரை சதம் இதுவாகும்.

தொடர்ந்து விளையாடிய டோனி 89 ஓட்டங்களில் அவுட் ஆனார். அப்போது இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 544 ஓட்டம் குவித்திருந்தது.

அத்துடன் மதிய உணவு இடைவேளையானது, இந்தியா அத்துடன் டிக்ளேர் செய்தது. பின் பங்களாதேஷ் 2 வது இன்னிங்சில் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களை எடுத்தது. போட்டியின் 4ஆவது நாள் இன்றாகும்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •