வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010


அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றுவோம்

அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றுவோம்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. ஜனாதிபதி யாக யார் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும்.

தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் சேர்ந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. தேர்தல் பரப்பு ரைக் காலத்தில் அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி மக்களும் எதிரெதிர் அணியாகப் பிரிந்திருந்தனர்.

இக் காலத்தில் இந்த அணிகளுக்கிடையே ஓரளவு பகைமையுணர்வு நிலவியது இரகசியமல்ல. தேர்தல் போட்டியில் இது சகஜம். தேர்தல் முடிந்த பின் பகைமை பேணுவது முட்டாள்தனம். இப்போது பகைமைகளை மறந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து தேசத்தை முன்னேற்றுவதற்கு முன்வர வேண்டும்.

மக்கள் மாத்திரமன்றி அரசியல் தலைவர்களும் தேச த்தின் முன்னேற்றத்துக்காக ஒன்றுசேர வேண்டிய காலம் இது.

முப்பது வருட காலமாக நாடு மோசமான பயங்கர வாதத்துக்கு உட்பட்டிருந்தது. இக் காலத்தில் ஏற்பட்ட இழப்புகளும் அழிவுகளும் கொஞ்சநஞ்சமல்ல. உயிரிழப்புகள் ஒரு புறம். உடைமைகளின் அழிவு கள் மறுபுறம். அபிவிருத்தியைப் பொறுத்தவரையில், பயங்கரவாதிகள் கோலோச்சிய பிரதேசங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட நிலை நிலவியது.

பயங்கரவாதத்தினாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தினாலும் சீரழிந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு மாத்திரமன்றி அனைத்துத் தரப்புகளையும் சேர்ந்த சகல மக்களுக்கும் உண்டு. இது எல்லோருக்கும் முன்னாலுள்ள தேசியக் கடமை.

பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சமகாலத்தில் அபிவிருத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதெனினும் முழுமை யான அபிவிருத்தியை அடைந்துவிட்டோம் எனக் கூற முடியாது. அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் நாங்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ உள்ளது. வட மாகாணம் மிகவும் பின்தங்கியிருக்கின்றது.

பயங்கரவாதம் காரணமாக அம் மாகாணத்தில் அபிவி ருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிய வில்லை. யுத்தத்தின்போது வடக்கின் சில பிரதேச ங்கள் மோசமாகச் சீரழிந்துள்ளன.

விசேட கவனத் துக்கு உட்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட வேண் டிய பிரதேசமாக வட மாகாணம் உள்ளது. இம் மாகாணத்தின் அபிவிருத்தி ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. இது மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காரணங்களால் இடம் பெயர்ந்தவர்களை அவர்களது பாரம்பரிய வாழ்புலங்களில் குடியமர்த்தும் பணி பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. அதேபோல, தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டியதும் புதிய நிர்வாக த்தின் முன்னுள்ள பிரதான பணிகளுள் ஒன்று.

இப்பணிகளையெல்லாம் திருப்திகரமாக நிறைவேற்று வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று மற்றவர்கள் ஒது ங்க முடியாது. அரசியல் தலைவர்கள் உட்பட சகல சமூக சக்திகளும் இப்பணியில் தங்கள் பங்களி ப்பைச் செலுத்தியாக வேண்டும். எனவே, தேர்தல் காலக் கருத்து வேறுபாடுகளையும் பகைமைகளையும் மறந்து நாட்டை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபடு வோம்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி