வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு இராணுவம் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கும்

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு இராணுவம் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கும்

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவதற்காக அமெரிக்கா தலைமையில் பல நாட்டு இராணுவங்கள் குவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நாடுகளை சேர்ந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் 2001ம் ஆண்டு முதல் அங்கு தங்கி இருக்கிறார்கள். வெளிநாட்டு இராணுவ வீரர்கள் மேலும் 5 ஆண்டுகளுக்கு அங்கு தங்கி இருப்பார்கள் என்று லண்டனில் நடந்து வரும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

லண்டனில் தீவிரவாதம் பற்றி விவாதிப்பதற்கான உலக மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேட்டோ நாடுகள் ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தான் அந்நிய இராணுவம் மேலும் 5 ஆண்டுகள் தங்குவதற்கு முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கிற தீர்மானத்தின் ஒரு பகுதி கசிந்து டைம்ஸ் பத்திரிகைக்கு கிடைத்து உள்ளது. அது இந்த தீர்மானத்தை வெளியிட்டு உள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •