வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

லேசர் மூலம் சூரிய ஒளியை விண்ணில் சேகரித்து பூமிக்கு கொண்டுவர திட்டம்

லேசர் மூலம் சூரிய ஒளியை விண்ணில் சேகரித்து பூமிக்கு கொண்டுவர திட்டம்

பூமியின் சுற்றுவட்ட பாதையில் சட்டிலைட்டுகளை அமைத்து சூரிய ஒளியை சேகரித்து அதை இன்பிராரெட் லேசராக மாற்றி பூமிக்கு கொண்டு வர விண்வெளி பொறியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

இது பற்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய விண்வெளி கம்பெனியான ஆஸ்ட்ரியமின் தலைவர் மேத்யூ பெர்ரன் கூறியதாவது,

உலக அளவில் மின்சாரத் தேவை அதிகரித்து உள்ளது. இந்த தேவையை சமாளிப்பதற்காக அனல் மின் நிலையங்களையோ அணுமின் நிலையங்களையோ அமைத்தால் அவை சுற்றுச் சூழலுக்கு ஆபத்தாக அமைந்து விடுகின்றன.

சுற்று சூழலை பாதிக்காத அளவில் மின்சாரம் பெறமுடியும் என்றால் அது காற்றாலை மூலமாகவோ சூரியசக்தி மூலமாகவோ தான் முடியும். சூரிய சக்தியை விண்வெளியில் சேகரிக்கும் போது அது பெரும் அளவில் கிடைக்கும். இவ்வாறு மேத்யூ பெர்ரன் கூறினார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •