வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

காஷ்மீரில் தனி மாநிலம் கோரி  ஹிலாரியிடம் மனு

காஷ்மீரில் தனி மாநிலம் கோரி  ஹிலாரியிடம் மனு

தங்களுக்கு தனி மாநிலம் உரு வாக்கி தர இந்திய அரசை வற்புறுத்த வேண்டும் என காஷ்மீர் பண்டிட்டுகள் அமெரிக்க அரசிடம் மனு கொடுத்துள்ளனர்.

காஷ்மீரில் 20 ஆண்டுகளாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கு தல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பயந்து, இந்துக்களான பண்டிட்டுகள் மாநிலத்தை விட்டு வெளியேறி இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். முகாம்களில் மட்டும் 45 ஆயிரம் பேர் உள்ளனர்.

இதற்கிடையே சர்வதேச காஷ்மீர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வோஷிங்டனில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரியை சந்தித்து, காஷ்மீரில் தங்களுக்கு தனி மாநில த்தை உருவாக்கித் தர இந்திய அரசை வற்புறுத்தும் படி கோரி மனு கொடுத்தனர். ‘காஷ்மீர் எங்கள் தாயகம் பல நூற்றாண்டு காலமாக நாங்கள் அங்கு வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு உரிய தொழில்கள் இந்த மாநிலத்தில் தான் உள்ளன. எங்கள் பாரம்பரியமும் அந்த மாநிலத்தில் தான் அடங்கியுள்ளது.

எனவே, ‘பனூன் காஷ்மீர்’ என்ற பெயரில் தனி மாநிலத்தை உருவாக்கி தர இந்திய அரசை வற்புறுத்த வேண் டும். காஷ்மீர் மாநில அரசு பொய் யான வாக்குறுதிகள் கொடுத்து எங் களை ஏமாற்றுகிறது. இந்திய அரசு பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லி எங்களை சமாதானப் படுத்த முயற்சிக்கிறது என பண்டிட் டுகள் அளித்த மனுவில் கூறப்பட்டு ள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •