வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

ஈராக்கிற்கு டீசல் ஏற்றுமதி; ஈரான் புதிய ஒப்பந்தம்

ஈராக்கிற்கு டீசல் ஏற்றுமதி; ஈரான் புதிய ஒப்பந்தம்

ஈரானில் இருந்து ஈராக்கிற்கு, இந்தாண்டு, நாள் ஒன்றுக்கு 19 ஆயிரம் பேரல்கள் டீசல் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் ஈரான், தன் நாட்டில் இருந்து எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்த தடையை ஒதுக்கித் தள்ளியது மட்டுமல்லாது, அண்டை நாட்டிற்கு எண்ணெய் விற்று, ஒரு வர்த்தகராகவும் செயல்படத் தொடங்கி உள்ளது.

ஈரானில் இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரித்தது. எனவே, மின் உற்பத்தி செய்ய, டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்டதால், அங்கு டீசல் பயன்பாடு பெருமளவு குறைந்தது. எனினும் கடந்தாண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையில், அந்நாடு டீசல் இறக்குமதி செய்தது.

இந்தாண்டு, ஈரானில் இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டீசல் ஏற்றுமதி செய்ய, அந்நாடு முன்வந்திருக்கிறது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் விதத்தில், அந்நாடு ஏற்றுமதி செய்யக்கூடாது என அமெரிக்கா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •